சட்டையில ராகுல்காந்தி! குஷியான பிரியங்கா காந்தி.. தொண்டருக்கு காரில் உடனடி லிஃப்ட்!
கடந்த வாரம் ஜூன் 13,14,15 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி அமலாக்கத்துறையில் ஆஜரானார். அவரிடம் கிட்டதட்ட 30 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
டெல்லியில் காங்கிரஸ் தொண்டர் ஒருவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காரில் அழைத்துச் சென்ற சம்பவம் கட்சியினரிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டு கைப்பற்றியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஜூன் 13,14,15 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி அமலாக்கத்துறையில் ஆஜரானார். அவரிடம் கிட்டதட்ட 30 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதில் அமலாக்கத்துறையின் பல முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டு ராகுல்காந்தியின் பதில் வாக்குமூலமாக பெறப்பட்டது. இதற்கிடையில் இன்று இரவு ராகுல் காந்தியிடன் விசாரணை நடைபெற்ற நிலையில் நாளையும் அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#WATCH | Delhi: Congress leader Priyanka Gandhi Vadra takes Rahul Gandhi's supporter in her car as she headed towards Jantar Mantar where her party is protesting over ED probe against Rahul in the National Herald case pic.twitter.com/K1lZS5Rift
— ANI (@ANI) June 20, 2022
அமலாக்கத்துறை சார்பின் சம்மன் அனுப்பப்பட்ட செயல் ராகுல் காந்தி மீது பாஜக அரசு செய்த அரசியல் காழ்புணர்ச்சி என குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் அங்கு அக்னிபத் போராட்டத்திற்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட டிஷர்ட் அணிந்த ஒருவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் போராட்ட களத்திற்கு சென்று கொண்டிருந்த பிரியங்கா காந்தி அவரை அழைத்து நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு அவருக்கு லிஃப்ட் கொடுத்து அழைத்து சென்றார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்