மேலும் அறிய

PM Modi : "தினமும் 3 கிலோ திட்டு வாங்குறேன், அதுதான் எனக்கு பூஸ்ட்.." பிரதமர் மோடி கிண்டல் பேச்சு..!

தெலுங்கானாவில் பிரதமர் மோடி பேசிய பேச்சுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ்நாட்டு பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, நேற்று தெலுங்கானாவில் நடந்த சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ், பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. 

3 கிலோ திட்டுக்கள் : 

இந்தநிலையில், தெலுங்கானா பேகம்பட்டில் நடந்த பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடியின் பேச்சுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்தியளவில்  ட்ரெண்டாகி வருகிறது. அதில், “அரசியல் என்பது சேவையை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். ஆனால், தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ளவர்கள், என்னை திட்டுவதையே முக்கிய அரசியல் பணியாக செய்து வருகின்றனர். இதற்காகவே அவர்களின் முழு சக்திகளையும் பயன்படுத்துகின்றனர். கடந்த இரண்டு நாட்களில், நான் புதுடெல்லியில் இருந்து கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா சென்று இங்கு வந்துள்ளேன். 

இதன் காரணமாக, ஒரு சிலர் என்னிடம் ‘நீங்கள் எப்போதும் சோர்வடைய மாட்டீர்களா..?” என பலரும் என்னிடம் கேள்வி கேட்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான். நான் தினமும் 2 முதல் 3 கிலோ வரை திட்டுகளை வாங்கி வருகிறேன். இந்த திட்டுகள், விமர்சனங்கள், கேலிகளை ஊட்டச்சத்தாக மாற்றும் ஆசியை கடவுள் எனக்கு வழங்கியுள்ளார். 

மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்வதற்கு தேவையான சக்தியை இவை வழங்குகின்றன. கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற பல ஊட்டச்சத்துகளை நான் பெற்று வருகிறேன். ஏமாற்றம், பயத்தால் சிலர் என்னை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்காக அகராதியில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தி சோர்ந்துவிட்டார்கள். 

கவலை வேண்டாம் :

என்னை யார் விமர்சித்தாலும் கட்சியினர், தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களை பார்த்து சிரித்திவிட்டு நம்முரைய பணிகளை செய்வோம். அவர்கள் திட்டுகளால் பாஜக கட்சி வளர்கிறது. நம் சின்னமான தாமரையும் வளர்ந்து வருகிறது. இதை பார்த்து நம் அனைவரும் மகிழ்வோம். 

என்னை நன்றாக திட்டுங்கள், அவற்றை நான் செரித்து விடுவேன். பாஜகவை திட்டுங்கள், அதனால் கட்சி நன்றாக வளரும். அதே நேரத்தில், தெலுங்கானா மக்களை அவமதித்தால் அதை ஏற்க மாட்டேன். இதற்கான பதிலடி நிச்சயம் கிடைக்கும். 

குடும்ப ஆட்சிக்கு முடிவு

தெலுங்காவின் பெயரை சொல்லி வளர்ந்தவர்கள், மக்களின் முதுகில் குத்திவிட்டனர். இங்கு ஒரு குடும்பம் மட்டும் வளர்ச்சி பெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாகும்.

சமீபத்தில் இங்கு நடந்த முனுக்கோடா சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் அதற்கு முன் நடந்த இடைத்தேர்தல்கள், மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதை காட்டுகின்றன. ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர்.” என்று தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget