PM Modi : அப்பாவை இழந்த அப்பாஸ் எங்கள் வீட்டில் தங்கி படித்தார்.. நண்பனின் கதை சொன்ன பிரதமர் மோடி..
தனது தாய் ஹிராபாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரை இன்று சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவரைக் குறித்து வாழ்த்துக் குறிப்பு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
தனது தாய் ஹிராபாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரை இன்று சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவரைக் குறித்து வாழ்த்துக் குறிப்பு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மேலும், குஜராத்தின் காந்திநகரில் தனது தாய் ஹிராபாவை நேரில் சந்தித்தார். தனது தாய் ஹிராபாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, அவரது பாதங்களையும் கழுவி வணங்கினார் பிரதமர் மோடி.
தொடர்ந்து, தனது தாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் எழுதிய வாழ்த்து மடலைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
அந்தக் கடிதத்தில், தாய்களுக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் மோடி குழந்தைகளின் வாழ்க்கையில் தாய்களின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். மேலும், தங்கள் தாய் மீது மிக்க அன்பு கொண்ட குழந்தைகளுக்காக எந்த சுயநலமும் இல்லாமல் தாய்கள் தங்களைத் தியாகம் செய்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
`தாய் என்பது அகராதியில் இருக்கும் மற்றொரு சாதாரண சொல் அல்ல. அது அன்பு, பொறுமை, நம்பிக்கை முதலான பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சொல். உலகம் முழுவதும், நாடுகள் பேதமின்றி, குழந்தைகள் தம் தாய் மீது கூடுதல் அன்பு கொண்டிருக்கின்றனர். தாய்கள் குழந்தைகளைப் பிரசிவிப்பது மட்டுமின்றி, அவர்களின் மனம், குணம், தன்னம்பிக்கை முதலான அனைத்தையும் உருவாக்குகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலமாக, தாகள் தங்களின் தனிப்பட்ட நலன்களையும் தியாகம் செய்கின்றனர்’ எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி. என் நண்பர் அப்பாஸுக்கு, அவருக்கு பிடித்த உணவுகளை ஈத் அன்று செய்து கொடுப்பார். என் நண்பர் அவரது தந்தையின் இழப்புக்கு பின் எங்களோடு வாழ்ந்தார்
Maa…this isn’t a mere word but it captures a range of emotions. Today, 18th June is the day my Mother Heeraba enters her 100th year. On this special day, I have penned a few thoughts expressing joy and gratitude. https://t.co/KnhBmUp2se
— Narendra Modi (@narendramodi) June 18, 2022
தொடர்ந்து பிரதமர் மோடி தனது குறிப்பில், `இன்று என் தாய் திருமதி ஹிராபா தனது நூறாவது ஆண்டை எட்டியிருப்பதை உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். என் தந்தை உயிரோடு இருந்திருந்தால், அவரும் தனது நூறாவது பிறந்த நாளைக் கடந்த வாரம் கொண்டாடியிருப்பார். 2022 சிறப்பான ஆண்டு. ஏனெனில் என் தாயின் நூற்றாண்டு தொடங்குவதும், என் தந்தையின் நூற்றாண்டு முடிவதும் இந்த ஆண்டில் தான்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி வதோதராவில் உள்ள பாவகத் கோயிலுக்குச் செல்வதுடன், பேரணி ஒன்றி காவிக் கொடியை ஏற்றுகிறார்.
பிரதமர் மோடியின் தாய் ஹிராபாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான வத்நகரில் பல்வேறு மத நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் மோடியின் குடும்பம் சார்பில் அகமாதாபாத்தில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.