Farm Laws Repeal: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை முடிவு குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தை அடுத்து இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை முடிவு குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார். Agricultural law withdrawn : வேளாண் சட்டங்கள் வாபஸ்.. வரவேற்ற தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்.!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்றும், முன்னுரிமை அடிப்படையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
Today, the Union Cabinet led by PM completed formalities to repeal the three Farm Laws. During the upcoming session of the Parliament, it will be our priority to take back these three laws: Union Minister Anurag Thakur pic.twitter.com/jNHuUrFeX8
— ANI (@ANI) November 24, 2021
மேலும், ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கும் திட்டம் தொடரும் என்றும், 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். kangna on Farm Law: இது வெட்கக்கேடான செயல்.... வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா!
It has been decided to extend the 'PM Garib Kalyan Anna Yojana' to provide free ration till March 2022: Union Minister Anurag Thakur on Cabinet decisions pic.twitter.com/9XO70IQXSz
— ANI (@ANI) November 24, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்