PM Modi Award : பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் நினைவு விருது.. எதற்காக தெரியுமா?
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படும் என்றும் அதன்படி முதல் விருதினை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படும் என்றும் அதன்படி முதல் விருதினை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபலமான பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர். லதா ஜி என அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். மராத்தியை பூர்வீகமாக கொண்ட லதா மங்கேஷ்கரின் குரலில் தமிழில் சில பாடல்களே வந்துள்ளது. ஆனாலும், அவரது குரலுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அடிமை என்றே சொல்லலாம்.
இவர் தமிழில் வலையோசை கலகலவென, ஆராரோ உள்ளிட்ட சில பாடல்களையே பாடியிருக்கிறார்.
மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பை ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பிப்ரவரி 6 ஆம் தேதி காலமானார். 92 வயதான பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தி மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி ப்ரதிஷ்தான் தொண்டு மையம் சார்பில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொண்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருது ஆண்டுக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும். அந்த நபர் தேசத்திற்காக பிரம்மாண்ட நன்மைகளை செய்திருக்க வேண்டும். அவை திருப்புமுனை செயல்களாக, வியத்தகு செயல்களாகவும் இருக்க வேண்டும். அது நம் மக்களுக்கு, சமூகத்திற்கும் பயன்பட வேண்டும்.
அதனால் தான் முதல் விருதுக்கு பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளோம். அவர், சர்வதேசத் தலைவர். அவர் இந்தியாவை சர்வதேச அரங்கில் உயரச் செய்துள்ளார். நம் தேசத்தில் நிகழும் எல்லா வளர்ச்சிக்கும் அவர் காரணம். பாரத தேசத்தின் மிகப்பெரிய தலைவர்களில் அவரும் ஒருவரும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் உள்ள ஒரு பகுதிக்கு பாரத ரத்னா விருது பெற்று லதா மங்கேஷ்கர் என்ற பெயரை சூட்டுவதாக அறிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி, லதா மங்கேஷ்கரின் தந்தையார் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கரின் 80வது நினைவுதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தான் விருது கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருது நிகழ்ச்சி மும்பை சண்முகானந்த் ஹாலில் நடைபெறுகிறது.
மராத்தியை பூர்வீகமாக கொண்ட லதா மங்கேஷ்கரின் குரலில் தமிழில் சில பாடல்களே வந்துள்ளது. ஆனாலும், அவரது குரலுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அடிமை என்றே சொல்லலாம்.