மேலும் அறிய

PM Modi: ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாஜக போராடுகிறது - பிரதமர் மோடி பேச்சு

ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த பாஜக போராடுகிறது என பிரதமர் மோடி தொண்டர்களிடன் உரையாற்றும் போது கூறியுள்ளார். 

ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த பாஜக போராடுகிறது என பிரதமர் மோடி தொண்டர்களிடன் உரையாற்றும் போது கூறியுள்ளார். 

பாரதிய ஜனதா கட்சி உதயமாகி இன்றோடு 44 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சி அலுவலகங்கள் தொடங்கி பல இடங்களில் பாஜக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் , நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனிடையே டெல்லியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கட்சி கொடியை ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சியின் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து சமீபத்தில் டெல்லியில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பாஜக மத்திய அலுவலகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து பாஜக நிறுவன தினத்தையொட்டி அவர் வீடியோ கான்பரசிங் வழியாக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, ஹனுமன் ஜெயந்தி கொண்டாடும் நாளில் வரும் இந்நாள் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டிய நாள். ஹனுமன் எப்படி ஒரு தியாகியாக இருந்தாரோ,   அதுபோல் நாமும் இந்த நாட்டிற்கு பிரதி பலன் பார்க்காமல் உழைக்க வேண்டும். பாஜகவும் அப்படி தான் உழைக்கிறது. தற்போதைய சூழலில் இந்தியா எந்தவொரு சவாலையும் சந்திக்க தயாராகவே உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியா புதிய உத்வேகத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது.

பாஜகவின் தாரக மந்திரமே தேசத்தின் வளர்ச்சி தான். அதுவே கட்சியின் முக்கிய நோக்கம். பாஜக எப்போதும் ஓட்டு வங்கி அரசியலை விரும்புவதில்லை. எங்களுக்கு சமூக நீதியே முக்கியம். சமூக நீதியை காப்பதுபோல எதிர்க்கட்சிகள் நாடகம் ஆடுகிறது. காங்கிரஸ் கட்சியோ வாரிசு அரசியல், இனவேறுபாடு வளர்த்தல் ஆகியவற்றை பின்பற்றி வருகிறது. அக்கட்சி ஏழைகளையும், மலைவாழ் மக்களையும் இழிவாக பார்க்கிறது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாதது. அவைகளால் யாருக்கும் பயன் இல்லை. என்னை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் பொய் சொல்கிறது. பாஜக குறித்து தவறான பிரச்சாரத்தை அக்கட்சிகள் செய்து வருகிறது. 

ஆனால் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் சதியும், பொய் பிரச்சாரமும் இதில் எடுபடாது. கடந்த கால ஆட்சியாளர்கள் காஷ்மீர் அமைதி குறித்து கவலைப்படவில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, 370 வது சட்டப்பிரிவு குறித்து எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் செய்தனர். ஏழைகளுக்கு கழிப்பறை, இலவச வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். இதுதான் சமூக நீதி. நான் அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் வெல்ல வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget