மேலும் அறிய

இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

UDISE+ அறிக்கை: இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல் - கல்வி எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலா?

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 13 பள்ளிகள் மூடப்படுவதாகவும் அதில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருப்பதாகவும் UDISE+ அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் பள்ளிக்கல்வி கட்டமைப்பு குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய UDISE+ அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாடு முழுவதும் நாள்தோறும் சராசரியாக 13 பள்ளிகள் நிரந்தரமாக மூடப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியூட்டும் தேசிய புள்ளிவிவரங்கள்

பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் 4,791 பள்ளிகள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளன. இதனைச் சராசரியாகக் கணக்கிடும் போது, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 13 பள்ளிகள் இழுத்து மூடப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசத்தின் கவலைக்கிடமான நிலை

பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் மோசமான நிலையில் உள்ளது. நாடு முழுவதும் மூடப்பட்ட மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையில், பாதிக்கும் மேற்பட்டவை (50 சதவீதத்திற்கும் மேல்) மத்தியப் பிரதேசத்தில்தான் அமைந்துள்ளன. இங்கு 2,426 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளன.

2024-25ஆம் ஆண்டில் 14,71,473 பள்ளிகளில் இருந்து 2025-26ஆம் ஆண்டில், 14,66,682 பள்ளிகளாகக் குறைந்துள்ளன. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கீழே உள்ள மாநிலங்கள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தெலங்கானா (1,392), மேற்கு வங்காளம் (568), ஆந்திரப் பிரதேசம் (474), தமிழ்நாடு (369), கர்நாடகா (281) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (266).

மூடப்படுவதற்கான காரணங்கள் என்ன?

இவ்வாறு ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படுவதற்கான முக்கிய காரணங்களையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

  • அரசுப் பள்ளிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாதது முக்கியக் காரணமாகும்.
  • 50 அல்லது அதற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சிறிய பள்ளிகளை, அருகிலுள்ள பெரிய பள்ளிகளுடன் இணைக்கும் மாநில அரசுகளின் கொள்கை போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை.
  • தனியார் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுவது.

அடிமட்ட அளவில் மாணவர்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்க்கும் அரசுப் பள்ளிகள் பெருமளவில் மூடப்படுவது, கிராமப்புற மற்றும் விளிம்புநிலை மாணவர்களின் கல்வியைக் கடுமையாக பாதிக்கும் என கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Embed widget