மேலும் அறிய

PM Modi: புதிய கண்டுபிடிப்புகளில் வேகமாக முன்னேறும் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்

உற்பத்தி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய போட்டித்திறனில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களில் பஜாஜ் நிறுவனம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆட்டோமொபைல், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக பஜாஜ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது.

பஜாஜ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,

“எந்தவொரு நிறுவனத்திற்கும் நூறு ஆண்டுகள் என்பது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது நீண்ட ஆயுளை மட்டுமல்லாமல், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனையும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும், தலைமுறைகளைத் தாண்டி பொருத்தமாக இருப்பதையும் பிரதிபலிக்கிறது.

ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் தொடங்கப்பட்ட பஜாஜ் குழுமம், நமது நாட்டின் வளர்ச்சியின் பல கட்டங்களில் இந்தியாவின் தொழில் மற்றும் பொருளாதார தளத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது. இது இந்தியாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற பல்வேறு துறைகளில் செயல்படும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது.

முக்கிய பங்காற்றும் பஜாஜ்:

பல தசாப்தங்களாக, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் வழியாகவும், சமூக மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதன் மூலமும் நம் நாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்பில் பஜாஜ் குழுமம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது போன்ற மைல்கற்கள் முக்கிய பங்களிப்புகளைப் பற்றி சிந்திக்கவும், அத்துடன் வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பைப் புதுப்பிக்கவும் ஒரு வாய்ப்பாகும்.

விக்சித் பாரத்:

உற்பத்தி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றில் புதிய லட்சியங்களுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. 2047 ஆம் ஆண்டிற்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிய பயணத்தை வடிவமைப்பதில் பஜாஜ் குழுமம் போன்ற ஆழமான வேர்களையும் செழுமையான அனுபவங்களையும் கொண்ட நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

வரவிருக்கும் ஆண்டுகளிலும் முன்னேற்றம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள தொடர்ச்சியான பங்களிப்புகளை பஜாஜ் குழுமம் வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” 

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய பாஜக அரசு 2047 விக்சித் பாரத் என்ற இலக்குடன் செயலாற்றி வருகிறது. பெட்ரோல், டீசலுக்கான மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறது. அதற்கான இலக்குகளுடன் பணியாற்றி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget