PM Modi Oath Ceremony LIVE: “மாநில உரிமைகளை மதிப்பீர்கள் என நம்புகிறேன்” - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து
PM Modi Oath Taking Ceremony LIVE Updates: மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற நிலையில், மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
LIVE
Background
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைத்ததையடுத்து இன்று புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. பாஜக கூட்டணி, சுமார் 400 இடங்களுக்கு மேலும் பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
கூட்டணி ஆட்சி அமைக்கும் பாஜக: ஆனால், அதை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் அமைந்தன. பாஜக அதன் கூட்டணி கட்சியுடன் இணைந்தே 293 இடங்கள் மட்டுமே கைப்பற்றியது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆந்திராவில் ஆட்சியமைக்கும் தெலுங்கு தேசம் கட்சி, பீகாரில் ஆட்சியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அவருடன் இணைந்து 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் பாஜக. ஆட்சி அமைக்க உறுதுணையாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 பேருக்கும், நிதிஷ்குமாரின் ஜனதா தளத்திற்கு 2 பேருக்கும் மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்? 16 தொகுதிளை தங்கள் வசம் வைத்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களான ராம் மோகன் நாயுடு, ஹரீஷ் பாலயோகி. டகுமல்லா பிரசாத் மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதில், சந்திரசேகர் ராவ் மிகவும் பணக்கார எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமின்றி நிதிஷ்குமாரின் ஜனதா தளத்தில் இரண்டு மூத்த தலைவர்களுக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், எல். முருகன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
PM Modi Oath Ceremony LIVE: “மாநில உரிமைகளை மதிப்பீர்கள் என நம்புகிறேன்” - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் “திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதன் மூலம் பிரதமராக, அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும், கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்தவும், மாநிலங்களின் உரிமைகளை மதிக்கவும், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும் உண்மையான உணர்வோடு செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
PM Modi Oath Ceremony LIVE: சுரேஷ் கோபி பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பாஜக தலைவர் சுரேஷ் கோபி மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
#WATCH | BJP leader Suresh Gopi sworn-in as Union Minister in the Prime Minister Narendra Modi-led NDA government pic.twitter.com/sH98GFSbW5
— ANI (@ANI) June 9, 2024
PM Modi Oath Ceremony LIVE: ராம்தாஸ் அத்வாலே பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய அமைச்சரவை அமைச்சராக இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே பதவியேற்றார்.
#WATCH | Republican Party of India leader Ramdas Athawale takes oath as a Union Cabinet Minister in the Prime Minister Narendra Modi-led NDA government pic.twitter.com/gh9VydMK7V
— ANI (@ANI) June 9, 2024
PM Modi Oath Ceremony LIVE: பாஜக தலைவர் நிமுபென் பம்பானியா மத்திய அமைச்சராக பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பாஜக தலைவர் நிமுபென் பம்பானியா மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
#WATCH | BJP leader Nimuben Bambhaniya takes oath as a Union Cabinet Minister in the Prime Minister Narendra Modi-led NDA government pic.twitter.com/ddlSVZuhaI
— ANI (@ANI) June 9, 2024
PM Modi Oath Ceremony LIVE: பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மற்ற நாட்டு பிரதமர்கள்
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலைதீவு அதிபர் டாக்டர் மொஹமட் முய்சு, சீஷெல்ஸ் துணை அதிபர் அஹமட் அபிஃப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
#WATCH | Sri Lanka President Ranil Wickremesinghe, Maldives President Dr Mohamed Muizzu, Vice President of Seychelles Ahmed Afif, Bangladesh PM Sheikh Hasina, Mauritius Prime Minister Pravind Jugnauth, Nepali PM Pushpa Kamal Dahal & Bhutan PM Dasho Tshering Tobgay with Prime… pic.twitter.com/KkRZczujWe
— ANI (@ANI) June 9, 2024