Maha Kaleshwar: உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயில்.. ரூ.850 கோடி திட்டம்.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி.,.
உஜ்ஜைன் ஸ்ரீ மகா காளேஸ்வரர் கோயிலில் 850 கோடி மதிப்பிலான திட்டத்தின் முதல் கட்ட பணியை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காலேஸ்வரர் கோயிலில் உள்ள மகா காள் நடைபாதை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில் மகா காளேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலை புனரமைப்பு மற்றும் விரிவுபடுத்துவதற்காக ரூ. 850 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
108 தூண்கள்:
இந்நிலையில் முதல் கட்ட பணியான மகா கல் நடைபாதையை, பிரதமர் மோடி இன்று மோடி திறந்து வைத்தார். இந்த நடைபாதையில் (மகா காள் பாதை) சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை(நடன வடிவம்) சித்தரிக்கும் வகையில் 108 தூண்கள் உள்ளன. இந்த நடைபாதையில் சிவ புராணங்களை கூறும் வகையிலும், கணேசனின் பிறப்பு குறித்து தெரிவிக்கும் வகையிலும் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
#WATCH | Ujjain, MP: PM dedicates to the nation Shri Mahakal Lok. Phase I of the project will help in enriching the experience of pilgrims visiting the temple by providing them with world-class modern amenities
— ANI (@ANI) October 11, 2022
Total cost of the entire project is around Rs 850 cr.
(Source: DD) pic.twitter.com/J1UnlU9XLa
இத்திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை மாநில அமைச்சர்கள் நரோத்தம் மிஸ்ரா மற்றும் துளசி ராம் சிலாவா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
In a historic moment for all the devotees, Hon’ble PM Shri @narendramodi Ji would be dedicating to the Nation; the magnificent & majestic 'Shri Mahakal Lok' corridor, built around the holy Mahakaleshwar Temple in Ujjain; Madhya Pradesh.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 11, 2022
Jai Shri Mahakaal 🙏
Har Har Mahadev 🚩 pic.twitter.com/JLbiAESa9v
பின்னர் மகா காள் நடைபாதையை, பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில் 'மகா காள் லோக்' திட்டமானது பக்தர்களுக்கு, சிவ புராணம் தொடர்பான சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தும் என்றும், உலகளாவிய தரத்தை உணர்த்துவதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், அடுத்தக்கட்ட பணி தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
Had the privilege of having Darshan of #Mahakal, 10 years back on my visit to Madhya Pradesh. Temple as it stands today is astoundingly different than what it was decade back. As a devotee, my gratitude to the ones behind this transformation. Jai Mahakaal. #NaMoShivayAtMahakalLok pic.twitter.com/Na9bTA4aMe
— Shesh Paul Vaid (@spvaid) October 11, 2022
இந்நிலையில் நடைபாதை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.