மேலும் அறிய

தரையில் தூங்கி சாத்வீகமான உணவு உண்ணும் பிரதமர் மோடி.. ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு விரதம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 11 நாள்களுக்கு சிறப்பு விரதம் இருக்க தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். 

சிறப்பு விரதம் இருக்கும் பிரதமர் மோடி:

இதற்காக 11 நாள்களுக்கு சிறப்பு விரதம் இருக்க தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. தரையில் தூங்குவது, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய அதிகாலையில் எழுந்திருப்பது, மந்திரம் ஓதுவது, தியானம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, சிறிது நேரம் மௌன விரதம் இருப்பது, சாத்வீக உணவுகளை மட்டும் உண்பது, மத நூல்களைப் படிப்பது, தூய்மையைப் பேணுவது, சொந்த வேலைகளை தானே செய்வது என பல வகையான கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகிறார் பிரதமர் மோடி.

நேற்று முன்தினம், நாசிக்கின் பஞ்சவடி பகுதியில் கோதாவரி கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ கலா ராமர் கோயிலில் பிரார்த்தனை செய்து பிரதமர் மோடி, தனது அனுஷ்டானத்தைத் தொடங்கினார். இந்த கோயில், ராமர் வாழ்வில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. 

ராமாயணத்தில் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பும் ராமரை பற்றி எடுத்துரைக்கும் யுத்த காண்டம் தொடர்பான கதா காலட்சேபத்தை கேட்பதையும் பஜனை பாடல்களை பாடுவதையும் விரதத்தின் ஒரு அங்கமாக பிரதமர் மோடி செய்து வருகிறார். அதுமட்டும் இன்றி, கோயிலில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தரையில் தூங்கி சாத்வீகமான உணவு உண்ணும் பிரதமர் மோடி:

பிரதமர் மோடியின் விரதம் குறித்து விரிவாக பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மஹந்த் நவல் கிஷோர் தாஸ், "அனுஷ்டானத்தின் போது, ​​முடிந்தால், தரையில் தூங்கலாம். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, குளித்துவிட்டு, கடவுள் முன் விளக்கேற்றி தியானம் செய்ய வேண்டும். கடவுளை வழிபட வேண்டும்.

ஒரு அனுஷ்டானம் என்பது குறைந்த பட்சம், பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். அதிகபட்சம், சாத்வீக உணவை உண்ண வேண்டும்.  இந்த காலகட்டத்தில் ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும். ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு கடவுளுக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும். தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதுகுறித்து ஆன்மீக குரு சுவாமி தீபங்கர் கூறுகையில், "அனுஷ்டானத்தின் போது சிறிது நேரம் மெளன விரதம் இருந்து,  சுந்தரகாண்டத்தை வாசிக்கலாம். ராமரின் ஜபம் செய்யலாம். யாகத்தில் ஈடுபடலாம். அனுஷ்டானத்தின் போது ஒரு குறிப்பிட்ட முறையில் தூங்கி உட்கார வேண்டும். இது சடங்குகளின் ஒரு அங்கம். அனுஷ்டான காலத்தில் ஒருவர் முடி அல்லது நகங்களை வெட்டக்கூடாது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget