Piyush Mishra: '7ம் வகுப்பில் உறவுக்கார பெண்ணால் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை..' பாலிவுட் பிரபலம் வேதனை
பழம்பெரும் நடிகரான பியூஷ் மிஸ்ரா, 50 ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவினரான பெண் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
பாலிவுட் பிரபலமான பியூஷ் மிஸ்ரா, 50 ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவினரான பெண் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது ஆரம்பகால வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
பாலிவுட் பிரபலத்திற்கு பாலியல் வன்கொடுமை:
ஏழாம் வகுப்பு படிக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை பியூஷ் தனது சுயசரிதை நாவலான தும்ஹாரி ஔகாத் க்யா ஹை பியூஷ் மிஸ்ராவில் குறிப்பிட்டுள்ளார். பிடிஐக்கு அளித்த பேட்டியில், பியூஷ் மிஸ்ரா, இந்த சம்பவம் தனது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அந்த நபரை பழிவாங்கும் எண்ணமில்லை என்று கூறினார்.
மேலும், “உடலுறவு என்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம், அதனுடன் உங்கள் முதல் அனுபவம் நன்றாக இருக்க வேண்டும், இல்லையெனில் அது உங்களை வாழ்நாள் முழுவதும் காயப்படுத்தும். அந்த பாலியல் வன்கொடுமை என் வாழ்நாள் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து வெளிவர எனக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. பலரின் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை” என கூறியுள்ளார்.
பன்முக கலைஞர்:
நான் யாரையும் பழிவாங்கவோ, யாரையும் காயப்படுத்தவோ விரும்பவில்லை என்றார். அவரது புத்தகம் இந்தியத் திரையுலகில் பல ஆண்டு கால பயணத்தையும், பார்வையாளர்கள் மத்தியில் அங்கீகாரம் பெறுவதற்கு முன்பு அவர் சந்தித்த பல போராட்டங்களையும் கஷ்டங்களையும் விவரிக்கிறது. “நாவல் எழுத வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. வெறும் இசையமைப்பாளராக அல்லது பாடகராக இருக்க விருப்பமில்லை. இப்போது, திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும்” கூறியுள்ளார்.
நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என அறியப்பட்ட பியூஷ் மிஸ்ராவின் சுயசரிதை, சந்தப் திரிவேதி அல்லது ஹேம்லெட்டின் கதாபாத்திரத்தின் மூலம் விவரிக்கப்படுகிறது. புத்தகத்தில், பியூஷ் நடிப்பு மற்றும் நாடகத்துறையில் தனது ஆர்வத்தைப் பற்றியும் பேசுகிறார், அங்கு அவரது தந்தை மருத்துவ அறிவியலைத் தொடர அழுத்தம் கொடுத்தாலும், இறுதியில் அவர் தனது 20 வயதில் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் (என்எஸ்டி) சேர முடிவு செய்தார். விஷால் பரத்வாஜின் மக்பூல் (2004), அனுராக் காஷ்யப்பின் குலால் (2009) மற்றும் 2012 இல் கேங்க்ஸ் ஆஃப் வஸ்ஸேபூர் ஆகிய திரைப்படங்களில் வரும் கதாப்பாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை.