RAC பயணிகளுக்கு பாதி கட்டணம்! ரயில்வேயின் அதிரடி மாற்றம்? பொதுக்கணக்கு குழுவின் பரபரப்பு பரிந்துரை
RAC பயணிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை.

RAC பயணிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை
பயணிகள் ரயிலில் RAC பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலிக்க கூடாது என நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.
RAC பயணிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்க வேண்டும்
சரியான நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுவதை ஆய்வு செய்த நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகள் ரயிலில் RAC பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலிக்க கூடாது. படுக்கை வசதி வழங்கப்படாமல் முழு கட்டணத்தை வசூலிப்பது முறையற்றது என பொதுக்கணக்கு குழு தெரிவித்துள்ளது. பயணிகள் பட்டியலை தயார் செய்தபின், RAC பயணிகளிடம் படுக்கை வசதி கொடுக்காமல் முழு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் முழு கட்டணத்தில் ஒரு பகுதியை பயணிகளுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதிவிரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க பரிந்துரை
சராசரியாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் ரயில்களை அதிவிரைவு ரயில்களாக வரையறுக்கும் முறையை மாற்றவும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு பரிந்துரைத்துள்ளது. நாட்டில் 478 அதிவிரைவு ரயில்களில் 123 ரயில்கள் நிர்ணயிக்கப்பட்ட 55 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக இயக்கப்படுவதாகவும் 123 ரயில்களில் 47 ரயில்கள் 55 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்படுவதாக குழுவுக்கு ரயில்வே அமைச்சகம் பதில் அளித்தது. இந்தப் பதிலில் திருப்தியடையாத குழு, கூடுதல் கட்டணம் வசூலிக்க அதிவிரைவு ரயில் என்று வரையறுப்பதாக குற்றச்சாட்டு வைத்தது. மேலும், 55 கிலோ மீட்டருக்கு குறைவாக இயக்கப்படும் ரயில்களை அதிவிரைவு ரயில்களாக வரையறுக்கக் கூடாது என்றும் பொதுக்கணக்கு குழு வலியுறுத்தியுள்ளது.

ரயில்வேக்கு எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கல்?
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கு ₹2.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பு, திறன் விரிவாக்கம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவதைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சகத்திற்கு ₹2.81 லட்சம் கோடியை அரசாங்கம் ஒதுக்கியது.
அதிவேக ரயில் சேவை
நாடு முழுவதும் மொத்தம் ஏழு வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு - ஹைதராபாத்துக்கு அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















