Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
பகல்ஹாம் தாக்குதலால் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ள இந்தியா சிந்து நிதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதால் பாகிஸ்தானிற்கு ஏற்படும் பாதிப்புகளை கீழே விரிவாக காணலாம்.

காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் இந்தியா தக்க பதிலடி தர முடிவு செய்துள்ளது.
தண்ணீரை நிறுத்திய இந்தியா:
இந்த நதிகளின் மூலம் திபெத்தில் தோன்றி ஆப்கானிஸ்தான், சீனாவைத் தொட்டு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பாய்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பவும், இந்தியா - பாகிஸ்தான் எல்லையை மூடவும், தூதரக பாதுகாப்பை வாபஸ் பெற்றும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பபட்டு வந்த சிந்து நதியையையும் நிறுத்த முடிவு செய்துள்ளது.
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்திருப்பது உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனென்றால், பாகிஸ்தானின் விவசாயத்தின் ஆணிவேராக சிந்து நதி திகழ்கிறது.
சிந்து நதி ஏன் பாகிஸ்தானுக்கு முக்கியம்?
- ரவி, பீஸ், சட்லஜ், சிந்து, ஜீனப், ஜீலம் ஆகிய நதிகளை உள்ளடக்கியது சிந்து நதிகளின் அமைப்பு ஆகும்.
- இதில் ரவி, பீஸ், சட்லஜ் ஆகிய நதிகளின் கட்டுப்பாடு இந்தியாவின் வசம் இருக்கிறது. ஜீனப், ஜீலம், சிந்து நதிகளின் கட்டுப்பாடு பாகிஸ்தான் வசம் உள்ளது.
- இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொண்ட சிந்து நதிநீ்ர் பங்கீடு ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு 20 சதவீத நீரும், பாகிஸ்தானுக்கு 80 சதவீத நீரும் பகிரப்பட்டு வந்தது.
- இதனால், இந்த நதிநீர் பாகிஸ்தானில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் நீர் ஆதாரமாக சிந்து நதி திகழ்கிறது. தற்போது இந்திய அரசு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்திருப்பதால் பாகிஸ்தான் மிக மோசமாக பாதிக்கப்படும்.
- பாகிஸ்தான் நாட்டிற்கு இந்த ஒப்பந்தம் மூலம் கிடைத்து வந்த 80 சதவீத நீர் திடீரென நிறுத்தப்பட்டால் அதன் பாதிப்பின் விளைவை நாம் உணர முடியும்.
- இந்த ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்படும். இந்த இரு மாகாணங்கள் நீர் ஆதாரத்தை இந்த ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் நீரே பூர்த்தி செய்து வந்தது.
- பாகிஸ்தானின் தேசிய வருமானத்தில் விவசாயத் துறை 23 சதவீதம் பங்களிப்பை அளிக்கிறது. மேலும், பாகிஸ்தான் கிராமப்புற மக்களில் 68 சதவீதத்திற்கான நீர் ஆதாரமாக இந்த சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் நீர் திகழ்கிறது.
- சிந்து நதி ஒப்பந்தம் மூலமாக பெறப்படும் தண்ணீர் மூலமாக பாகிஸ்தானின்3 மில்லியன் ஏக்கர் பரப்பளவு பயன் பெறுகிறது. ஒட்டுமொத்த பாகிஸ்தானின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த நீர் இன்றியமையாதது.
- நீர் ஓட்டத்தில் ஏற்படும் எந்தவொரு சிறு தடங்கலும் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த விவசாயத்தையுமே கணிசமாக பாதிக்கும். பாகிஸ்தான் நாட்டின் பிரதான அணைகளாக மங்லா மற்றும் தர்பேலா அணைகளில் சேர்த்து வைக்கப்படும் நீ்ர் இருப்பு இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் மூலம் பெறப்படும் நீர்களில் வெறும் 10 சதவீதம் மட்டுமே ஆகும்.
- இந்த நிலையில், இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதால் பாகிஸ்தானில் விவசாயம் மற்றும் தண்ணீரில் மிகப்பெிரய சிக்கலை சந்திக்க நேரிட வாய்ப்பு உள்ளது.
சிந்து நதி ஒப்பந்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
1960ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே இதேபோல மோதல் போக்கு வெடித்தபோது இந்தியா தண்ணீர் வழங்குவதை நிறுத்தியது. அப்போது ஐநா இந்த விவகாரத்தில் தலையிட்டு அப்போதைய இந்திய பிரதமர் நேரு - பாகிஸ்தான் அதிபர் ஆயுப் கான் முன்னிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்பாடு செய்தது.

