Padma Awards 2024:விஜயகாந்த், வைஜெயந்தி மாலா, சிரஞ்சீவி உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்..முழு பட்டியல் இங்கே..
2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் இடம் பெற்றுள்ளார்கள்.
2024 ஆம் ஆண்டுக்கான பத்மவிருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் இந்த விருதானது வழங்கப்படும்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருதுகள் பெற்ற சில முக்கிய பிரபலங்களின் பெயர்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷன் விருதுகள்
- நடிகை வைஜெயந்தி மாலா (தமிழ்நாடு)
- நடிகர் சிரஞ்சீவி
- முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு
- பிந்தேஸ்வரர் பதக்
- நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியன் (தமிழ்நாடு)
பத்ம பூஷன் விருதுகள்
- மறைந்த முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி
- பாடகி உஷா உதுப்
- மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் (தமிழ்நாடு)
- நடிகர் மிதுன் சக்ரபோர்ட்டி
- ஹோர்முஸ்ஜி
- சீதாராம் ஜிண்டல்
- யங் லியு
- சத்யபிரதா முகர்ஜி
- அஷ்வின் பாலசந்த் மேத்தா
- ராம் நாயக்
- தேஜஸ் மதுசூதன் படேல்
- ராஜகோபால்
- தத்தாத்ரே அம்பாதாஸ்
- டோக்டன் ரின்போச்சே
- பியாரேலால் சர்மா
- சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர்
- குந்தன் வியாஸ்
பத்ம ஸ்ரீ விருதுகள் -
110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
- வள்ளி கும்மி நடனக்கலைஞர் பத்திரப்பன் (தமிழ்நாடு)
- ஜோஸ்னா சின்னப்பா (தமிழ்நாடு)
- எழுத்தாளர் ஜோ டி குரூஸ் (தமிழ்நாடு)
- நாச்சியார் (தமிழ்நாடு)
- ஷேசம்பட்டி டி சிவலிங்கம் (தமிழ்நாடு)
இந்த விருதுகள் அனைத்தும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் விழாக்களில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பத்ம விருதுகளில் பிந்தேஸ்வர் பதக், பாத்திமா பீவி, விஜயகாந்த், டோக்டன் ரின்போச், சத்தியபிரதா முகர்ஜி ஆகிய 5 பேருக்கு பத்ம விருதுகள் அவர்களின் மறைவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் பர்பதி பருவா, ஓவியர் அசோக் குமார் பிஸ்வாஸ், நாடக கலைஞர் ஓம் பிரகாஷ் சர்மா, சிற்பி சனாதன் ருத்ர பால் ஆகியோருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.