(Source: ECI/ABP News/ABP Majha)
Online Wedding: நம்பலன்னாலும் அதான் நெசம்: பொண்ணு கேரளாவில், பையன் நியூசிலாந்தில்... ஆன்லைனில் தாலிகட்டி திருமணம்..!
தற்போது, தங்களின் எதிர்கால கனவுகளுக்கு காத்திருக்க வேண்டியதில்லை என்பதின் அவசியத்தை உணர்த்தியுள்ளனர் சமீபத்தில் ஆன்லைனில் வீடியோ கால் மூலம் திருமணம் செய்துக்கொண்ட கேரள ஜோடி.
கொரோனாவால் ஆன்லைனிலே இருவரும் திருமணம் செய்துக் கொண்ட நிகழ்வு கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கொரோனா மற்றும் ஊரடங்கு அனைவரின் வாழ்க்கை முறையையும் பெரிய அளவில் மாற்றியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் சந்திப்புகள், ஆன்லைன் வேலைகள் மற்றும் ஆன்லைன் திருமணங்கள் ஆகியவை வழக்கமாகிவிட்டன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மணமகனும், மணமகளும் வெவ்வேறு இடங்களில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் அவர்களின் கனவுகள் காத்திருக்க வேண்டியதில்லை.
தற்போது, தங்களின் எதிர்கால கனவுகளுக்கு காத்திருக்க வேண்டியதில்லை என்பதின் அவசியத்தை உணர்த்தியுள்ளனர் சமீபத்தில் ஆன்லைனில் வீடியோ கால் மூலம் திருமணம் செய்துக்கொண்ட கேரள ஜோடி. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திரிபிராரை சேர்ந்த கீர்த்தனா ஜோதியும், கைப்பமங்கலத்தை சேர்ந்த நிர்மல் தாசும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. செப்டம்பர் 2020 இல் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா மற்றும் ஊரடங்கால் இவர்களின் திருமணம் தள்ளிக்கொண்டே போயுள்ளது. மேலும் படிக்க: Viral video: ”இந்த ரோட்டை பாருங்களேன்..” : செய்தியாளராக மாறி வறுத்தெடுத்த குட்டி சிறுமி..
மணமகன் நிர்மல் நியூசிலாந்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா
கட்டுப்பாடுகள் காரணமாக, அவரால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்கு வர முடியவில்லை. கீர்த்தனா கேரளாவில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
இந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை காரணமாக கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டதால், ஆன்லைன் திருமணத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து இரு வீட்டாரும் விசாரித்துள்ளனர். அதன்படி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மணப்பெண் கீர்த்தனா கூறுகையில், கடந்த ஆண்டு நவம்பரில், திரிபிராயர் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இரு வீட்டாரும் வழக்கறிஞரை சந்தித்து, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்வதற்கான வழிகள் குறித்து விசாரித்தோம். அனுமதி கிடைத்ததும், ஆன்லைன் திருமணத்திற்குத் தயாராகினோம். நிர்மலின் பதிவாளர் முன் நிர்மல் சார்பாக அப்பா கையெழுத்து போட்டார், மற்ற உறவினர்கள் சாட்சியாக கையெழுத்திட்டனர். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நிர்மலும் இருந்தார்” என்று கூறினார். மேலும் படிக்க: Video - Monkey Funeral | 1500 பேருக்கு விருந்து.. கொரோனாவுக்கு பயமில்லாமல் குரங்கின் இறுதிச்சடங்குக்கு அழுத கிராமம்.. கடுப்பான போலீஸ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்