மேலும் அறிய

Odisha Train Accident: 'கொஞ்சம் தண்ணி கொடுங்க..’ : மீட்பு பணியாளரிடம் கெஞ்சிய நபர்.. ஒடிஷா பிணவறையில் அதிர்ச்சி..

ரயில் விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட 35 வயது நபர், இறந்த உடல்களை தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள பிணவறையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) மாலை பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 1ம் தேதி இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த ஹவுரா அதிவிரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதே வழித்தடத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்று  மோதியதில் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக உருவெடுத்தது.

இந்தநிலையில், நேற்று ரயில் விபத்தில் 288 பேர் இறந்ததாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகள், பல்வேறு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, பாலசோரில் ஏற்பட்ட உயிரிழப்பு 288 என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், இதுவரை 205 உடல்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 

பிணவறையில் உயிருடன் இருந்த நபர்: 

ஒடிசாவின் பாலசோரில் நடந்த கொடூரமான ரயில் விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட 35 வயது நபர், இறந்த உடல்களை தற்காலிகமாக வைத்திருந்த பிணவறையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடந்த ஹவுரா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு- ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயிலில் மூன்று  ரயில் விபத்துக்குள்ளானதில் ராபின் நையா என்ற 35 வயது நபர் மயக்கமடைந்துள்ளார். அப்போது, மீட்பு பணியில் இருந்த ஊழியர்கள் நையா இறந்துவிட்டதாக எண்ணி, பாலசோரில் உள்ள ஒரு பிணவறையில் போட்டுள்ளனர். பின்னர், பிணவறையில் பல்வேறு கணக்கான சடலங்கள் மத்தியில் நையா மூச்சு திணறிய நிலையில் கிடந்துள்ளார். 

இந்தசூழலில், அறைக்குள் குவிந்திருந்த சிதைந்த உடல்களை அகற்ற மீட்புப் பணியாளர்கள் அறைக்குள் நுழைந்தபோது, நையா அவர்களில் ஒருவரின் காலை பற்றிக்கொண்டு கெஞ்சியுள்ளார். அதில், நையா சிறிய முனகலுடன், “நான் உயிருடன் இருக்கிறேன். இன்னும் சாகவில்லை. தயவுசெய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள்” என கேட்டுள்ளார். 

இதைக்கேட்ட மீட்பு பணியாளர்கள் உடனடியாக அவருக்கு சிறிது தண்ணீர் கொடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மீட்புப் படையினர் அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள சர்நேகாலி கிராமத்தில் வசிக்கும் நையா, ரயில் விபத்தில் உயிர் பிழைத்தார், ஆனால் அவரது இரண்டு கால்களையும் இழந்தார். தற்போது, அவர் ஆபத்தான நிலையில் மேதினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிராமத்தைச் சேர்ந்த மற்ற ஏழு நபர்களுடன், நையாவும் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் ஹவுராவிலிருந்து ஆந்திராவிற்கு வேலை தேடி வந்துள்ளார்.

நையாவுடன் பயணித்த ஆறு நண்பர்கள் குறித்த தகவல்கள் இன்னும் என்னவென்று தெரியவில்லை.

ஜூன் 2 நடந்த ரயில் விபத்து நையாவின் குடும்பத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம். 2010 ஆம் ஆண்டு மேற்கு மிட்னாப்பூரில் 148 பேரைக் கொன்ற ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் ராபினின் மாமா உயிர் பிழைத்தார். ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, எதிர் திசையில் இருந்து வந்த சரக்கு ரயில் மீது மோதியது.

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget