UP : அது சாத்துக்குடி ஜூஸ் இல்லை; பதப்படுத்தப்படாத பிளேட்லெட்டுகள்- மாவட்ட நிர்வாகம் விளக்கம்!
டெங்குவால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்டது பதப்படுத்தப்படாத பிளேட்லெட்டுகள் என்று பிரயாக்ராஜ் மாவட்ட மெஜிஸ்ட்ரேட் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை சென்ற நபருக்கு நரம்பு மூலம் சாத்துக்குடி சாறு செலுத்தப்பட்டதால் உயிரிழந்தார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டது முறையாக பதப்படுத்தப்படாத பிளேட்லெட்டுகள் என்று பிரயாக்ராஜ் மாவட்ட மெஜிஸ்ட்ரேட் சஞ்சய் காட்ரி(Sanjay Khatri ) விளக்கம் அளித்துள்ளார்.
The @DM_PRAYAGRAJ has told NDTV’s @AjayNDTV that allegations of ‘mosambi juice’ being transfused to a dengue patient who died last week are not true and that he was given platelets but they were ‘poorly preserved’ … pic.twitter.com/bR5fDtjdUJ
— Alok Pandey (@alok_pandey) October 26, 2022
பிரயாக்ராஜ் (Prayagraj) கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இரத்த பிளேட்லெட்டுகளுக்கு பதிலாக சாத்துக்குடி சாறு டிரிப்ஸ் மூலம் ஏற்றப்பட்டதால் அவர் உயிரிழந்த்தார் என்ற தகவல் வெளியானது. இது பேசுப்பொருளானது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவம் அளிக்கும்போது வழங்கப்பட்டது சாத்துக்குடி சாறு இல்லை, அது முறையாக பதப்படுத்தப்படாத பிளேட்லெட்கள் என்று மாவட்ட மெஜிஸ்ட்ரேட் சஞ்சய் காட்ரி(Sanjay Khatri ) தெரிவித்துள்ளார்.
UP | Prayagraj Development Authority issued a notice to Global Hospital to vacate the building by Oct 28. Authority termed the building as "illegally constructed"
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 26, 2022
The hospital came to light after it allegedly transfused fruit juice instead of blood platelets to a dengue patient
கடந்த வாரம் குளோபல் மருத்துவமனையில் 32 வயதான நோயாளிக்கு 'பிளாஸ்மா' என குறிக்கப்பட்டிருந்த பையில் இருந்த சாத்துக்குடி சாறு நரம்பு வழியே ஏற்றப்பட்டுள்ளதாக உறவினர்கள் புகார் கூறியிருந்தனர். இதனால் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவமனை அம்மாநில துணை முதலமைச்சரின் பிரஜேஷ் பதக் ( Brajesh Pathak)உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. அதோடு அம்மருத்துவமனையை இடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், டெங்குவால் பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுக்கப்பட்டது முறையாக பதப்படுத்தப்படாத பிளேட்லெட்டுகள் என்று தெரியவந்துள்ளது.