காந்தி அல்ல; நேதாஜிதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்: சுபாஷ் சந்திரபோஸ் உறவினர்!
பிரதமர் நேரு நேதாஜியை வரலாற்றில் இருந்து ஓரங்கட்டிவிட்டார். நேருவுக்கும் நேதாஜிக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு இருந்தது
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்ததினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட பலர் அவருக்கு மரியாதை செலுத்தினர். போஸின் பிறந்தநாளை ஒட்டி செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் அவரது மருமகன் அர்தேந்து போஸ்.
नेताजी सुभाष कुछ ठान लेते थे तो फिर उन्हें कोई ताकत रोक नहीं पाती थी।
— PMO India (@PMOIndia) January 23, 2022
हमें नेताजी सुभाष की ‘Can Do, Will Do’ स्पिरिट से प्रेरणा लेते हुए आगे बढ़ना है: PM @narendramodi
A historic day,
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
A historic programme,
At a historic location…
The statue of Netaji Subhas Chandra Bose is a fitting tribute to his indelible contribution to our nation. pic.twitter.com/Azb4LF0o2E
President Ram Nath Kovind paid floral tributes to Netaji Subhas Chandra Bose on his 125th birth anniversary at Rashtrapati Bhavan. pic.twitter.com/IoZeg1YSbZ
— President of India (@rashtrapatibhvn) January 23, 2022
அவரது பேட்டியில்,’காந்தியின் அகிம்சையை விட சுபாஷ் சந்திர போஸின் அசாத் ஹிந்த் ஃபௌஜ் இயக்கம்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது’ என அவர் கூறியுள்ளார். மேலும் ‘பிரதமர் நேரு நேதாஜியை வரலாற்றில் இருந்து ஓரங்கட்டிவிட்டார். நேருவுக்கும் நேதாஜிக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு இருந்தது. அதனால் அவர் ஓரங்கட்டியதில் ஆச்சரியமில்லை' என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதனால்தான் வரலாற்றுப் புத்தகங்களில் அவர் பற்றி எதுவும் இல்லை என்றும் இளைஞர்களுக்கு அவர் பற்றி எதுவும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | It was not Gandhi's peace movement that brought independence to India.The activities of Azad Hind Fauj and Netaji brought independence to this country and it was admitted by the then PM of England, Clement Richard Attlee: Ardhendu Bose, #NetajiSubhashChandraBose's nephew pic.twitter.com/9HGn4IbeOi
— ANI (@ANI) January 23, 2022