மேலும் அறிய

Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்

Noida Protest Today: நொய்டாவில் ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம், கலவரமாக வெடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Noida Protest Today: நொய்டாவில் ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம், கலவரமாக வெடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலவரமாக வெடித்த போராட்டம்

ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ஊழியர்களின் போராட்டம், கலவரமாக மாறிய சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ வைப்பு சம்பவங்கள், கல் வீச்சு மற்றும் இரண்டு தரப்புக்கும் இடையேயான மோதல்கள் ஆகியவற்றால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் குழுவின் பெரும்பகுதியினர் சாலைகளை மறித்ததால், டெல்லி - நொய்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிலாளர்கள் கூட்டத்தை கலைக்க, போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சாலையில் இறங்கி போராட்டம்

பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள அந்த பகுதியின் குறிப்பாக செக்டார் 1 மற்றும் செக்டார் 84 ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குறைந்தது 2 வாகனங்களை தீயிட்டு எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலை பகுதியில் பதற்றமான சூழல் தொற்றிக்கொள்ள, பெரும்பாலான தொழிலாளர்கள் சாலையில் இறங்கி முழக்கங்களை எழுப்பி போக்குவரத்தை இடைமறித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பதற்றமான சூழலை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தொழிலாளர்கள் குழுக்களுடன் பேச்சுவார்த்தையும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றுள்ளன.

பிரச்னை என்ன?

நொய்டாவின் அந்த பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகளின் ஊழியர்களும் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செக்டார் 62ல் தொடங்கிய போராட்டம் அடுத்தடுத்து அந்த பகுதி முழுவதும் பரவியுள்ளது. அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகள் ஏற்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நிறுவன பிரதிநிதிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், 24 மணி நேரம் கடந்தும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் இந்த வன்முறை வெடித்துள்ளது.

குவிக்கப்பட்ட போலீசார்..

டெல்லி மற்றும் நொய்டாவைச் சேர்ந்த ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிகப்படியான வாகனங்கள் குவிந்து இருந்ததால், உடனடியாக அங்கு சூழல் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால் டெல்லி - நொய்டா எல்லை, DND மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் அதிகப்படியான குழப்பமான சூழல் நிலவியது. போராட்டக்காரர்கள் சில்லா எல்லையருகே உள்ள நொய்டா இணைப்புச் சாலையை முழுவதுமாக மறித்துள்ளதால், டெல்லியிலிருந்து நொய்டாவிற்கான போக்குவரத்து கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீவிர பேச்சுவார்த்தை

இதனிடையே,  போராட்டங்களைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டும் நோக்கில் நொய்டா ஆணையத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல், கூடுதல் நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் உறுதி செய்வது, போனஸ் வழங்குவது, வாராந்திர விடுப்பு வழங்குவது மற்றும் பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் விவாதித்தனர்.

நொய்டா மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம்,  தொழிலாளர்களின் வசதிக்காக ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அனைத்துப் புகார்களும் உடனடியாகக் கவனிக்கப்படும் எனவும் உறுதியளித்தார். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு, கௌதம் புத்த நகர் ஆணையரகத்தின் கீழ் உள்ள தொழிற்பேட்டைகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget