திரிபுரா கலவரம்: ‛எந்த மசூதியும் எரிக்கப்படவில்லை...’ புகைப்படத்தை வெளியிட்ட போலீஸ்..!
பனிசாகரில் உள்ள மசூதியின் புகைப்படங்கள் உள்ளன. மசூதி பாதுகாப்பாகவும் உள்ளது என்பது தெளிவாகிறது.
திரிபுராவில் எந்த மசூதிக்கும் தீ வைக்கப்படவில்லை என்று அம்மாநில காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வடக்கு திரிபுரா மாவட்டத்தின் பனிசாகரில் வங்கதேசத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டதற்கு எதிராக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் துணை அமைப்பான விசுவ இந்து பரிஷத் பேரணி நடத்தியது. அப்போது, சம்தில்லா என்ற இடத்தில் ஒரு மசூதி மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், எந்த மசூதியும் எரிக்கப்படவில்லை என்று அம்மாநில போலீசார் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து திரிபுரா காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு ஐஜிபி சவுரப் திரிபாதி கூறுகையில், ‘ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் போலி செய்திகளையும் வதந்திகளையும் பரப்புகின்றன. பரப்பப்படும் வீடியோக்களுக்கும் புகைப்படங்களுக்கும் பனிசாகர் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த மசூதியிலும் தீ விபத்து ஏற்படவில்லை” என்று கூறினார்.
Anti-national & mischievous elements on Twitter & FB are spreading fake news & rumours. The videos & photos that are being spread have no connection with the Panisagar incident. No fire incident took place at any mosque: Tripura Police IGP Law and order Saurabh Tripathi (27.10) pic.twitter.com/RyM1OhKmnM
— ANI (@ANI) October 28, 2021
வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று திரிபுரா காவல்துறை அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. பனிசாகரில் உள்ள மசூதியின் புகைப்படங்கள் உள்ளன. மசூதி பாதுகாப்பாகவும் உள்ளது என்பது தெளிவாகிறது.
Tripura Police appeals to all not to spread rumours.
— Tripura Police (@Tripura_Police) October 28, 2021
Below are photographs of masjid in Panisagar. It is evident that masjid is safe and secure. pic.twitter.com/kp1oCEBa8T
முன்னதாக, விஎச்பி உறுப்பினர்கள் சிலர் இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, திரிபுராவில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அமைத்துள்ளது. வன்முறையில் தங்கள் உறுப்பினர்களுக்கு தொடர்பு இல்லை என்று பாஜக மறுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்