பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் திட்டம்: இன்று முதல் தொடக்கம்!
பொதுத்துறை நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு கழகம், வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்பதாக கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான புதிய திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று துவக்கி வைக்கிறார்.
இந்தியாவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வரும் ஆண்டுகளில் அரசின் வருவாயினை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்களைக்கொண்டு வருவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு வழிமுறைகளைக்கொண்டுவருகிறது. இதன்படி பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்திய அரசின் பொதுச்சொத்துக்களை பணமாக்கலுக்கான புதிய திட்டத்தினை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. குறிப்பாக கடந்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு கழகம், வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்பதாக கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இவ்வாறு பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசு அடுத்த நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கான இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இதன் மூலம் நாட்டில் உள்ள புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தப்போதும் பொதுத்துறை வங்கிகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு எதிர்ப்புகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வந்தனர். மேலும் இத்திட்டம் அரசின் சொத்துக்களை அனைத்தும் தனியாருக்கு விற்பனை செய்யும் வழிமுறைகளை வகுப்பதாகக் குற்றம் சாட்டிவந்தனர்.
இந்நிலையில் தான், இந்தியாவில் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதற்கான புதிய திட்டத்தினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிமுகம் செய்கிறார். இதன் மூலம் இரயில்வே, விமான நிலையம், பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றின் மூலம் சுமார் 6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களைக்கொண்டு நிதி திரட்டப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக ரயில்வே, விமானத்துறை போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புகளை தனியாருக்கு விற்கு அதன் மூலம் வருவாயினை ஈட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான என்.எம்.பி என்ற திட்டம் இன்று முதல் அறிமுகமாகிறது. மேலும் இதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், முதலீட்டாளர்களுக்கு தெரிவு நிலையை வழங்குவதோடு மட்டுமில்லாமல் பணமாக்கல் வழிமுறையும் இத்திட்டம் கொண்டுள்ளது. எனவே அடுத்த நான்கு ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை பங்குகளை விற்று பணமாற்றுவதை இலக்காகக்கொண்டு தேசிய பணமாக்கல் ஆதால வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே தொலை நோக்குப்பார்வையோடு மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ள இந்த திட்டத்தினை மத்திய நிதிஅமைச்சர் இன்று துவங்குகிறார். இந்த விழாவில் நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜூவ் குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவுள்ளனர். மேலும் இதில் பொதுத்துறை சொத்துக்களை விற்று பணமாக்குவதற்கான தேசிய பணமாக்கல் ஆதாரப்புத்தகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.