Nipha Virus in Kerala : கேரளாவில் 188 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பா? அரசு கூறிய அதிர்ச்சித் தகவல்!
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 188 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் நிபா வைரசால் நேற்று முன்தினம் 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்த மாநில கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணாஜார்ஜ் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில், " நிபா வைரசால் முதலில் பாதிக்கப்பட்டது அந்த சிறுவன்தானா? அல்லது வேறு யாரேனுமா? அந்த சிறுவனுக்கு யார் மூலமாக நிபா வைரஸ் பரவியது என்பதை அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுவன் மூலமாக 188 பேருக்கு நிபா வைரஸ் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 20 பேர் நிபா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அந்த 20 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனை முதலில் சிகிச்சையகம் ஒன்றுக்கு அவனது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி என வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறான். இதனால், அவன் மூலம் மேலும் பலருக்கு நிபா வைரஸ் பரவியிருக்கக் கூடும். அவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நடவடிக்கைகளை வலுப்படுத்த முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி பரிசோதனை மையத்தை தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனை முடிவுகளை விரைவில் பெற உதவும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் தொடர்பாக பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய நிர்வாகத் திட்டத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. கேரளாவில் ஏற்கனவே கொரோனா வைரசின் பாதிப்பு தினசரி 30 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதனால், அந்த மாநில மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கேரள மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் தொடர்பாக பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய நிர்வாகத் திட்டத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு – கேரள எல்லைகளில் கடுமையான கண்காணிப்ப பணியில் தமிழ்நாடு சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Nipah Virus Kerala: ''நதியினில் வெள்ளம்.. கரையினில் நெருப்பு..'' நிபாவும்.. கொரோனாவும்.. கேரளாவும்!