மேலும் அறிய

"தரம் தாழ்ந்த, நாகரீகமற்ற செயல்.." பாகிஸ்தான் அமைச்சருக்கு தக்க பதிலடி தந்த இந்தியா..! தொடர்ந்து குவியும் கண்டனங்கள்..!

இது தரம் தாழ்ந்த கருத்து. நாகரீகமற்ற வெளிப்பாடு என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை  ‘குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர்’ என விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை  அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு:

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியிருந்தது. ’சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு’ என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கொல்லப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை விருந்தாளியாக வைத்து கொண்டு, அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நாட்டுக்கு, மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை" என்றார்.

ஜெய்சங்கரின் இந்தக் கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி ’குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர்’ என கடுமையாக விமர்சித்துள்ளார். "ஒசாமா பின் லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவர்தான், இந்தியாவின் பிரதமர். பிரதமராவதற்கு முன்பு வரை, இந்த நாட்டுக்கு (அமெரிக்கா) வருவதற்கு அவருக்கு தடை வதிக்கப்பட்டிருந்தது.

இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதமர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்றால் என்ன? ஹிட்லரின் எஸ்எஸ் ராணுவ அமைப்பிடமிருந்துதான் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு உத்வேகம் பெறுகிறது" என பிலாவல் பூட்டோ கடுமையாகப் பேசியிருந்தார்.

தரம் தாழ்ந்த செயல்:

பிலாவல் பூட்டோவின் இந்தக் கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் தொடங்கி பலரும் கண்டனக்குரல் எழுப்பி வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முன்னதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ”இது தரம் தாழ்ந்த கருத்து. நாகரீகமற்ற வெளிப்பாடு. லக்வி, ஹபீஸ் சயீத், மசூத் அசார், சாஜித் மிர், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து, ஒசாமா பின்லேடனை தியாகி என்று போற்றும் நாடு பாகிஸ்தான்.  

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் விரக்தி மனநிலை, பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நாட்டின் கொள்கைகளில் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டிருக்கும், பயங்கரவாத நிறுவனங்களின் மூளையாக செயல்படுவர்களை நோக்கி செலுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்” என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர்:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும் நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு குறித்த தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு முன்னதாக ஜெய்சங்கர் சென்றிருந்தார்.

இதில், பங்கேற்று பேசிய ஜெய்சங்கர், "மற்றொரு 9/11 இரட்டை கோபுர தாக்குதலையோ 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலையோ நடத்த அனுமதிக்க முடியாது. கடந்த 20 ஆண்டுகளில், பயங்கரவாதம் குறிப்பிடத்தக்க வகையில் எதிர்க்கப்பட்டுள்ளது. பயங்கரவாத்தை நியாயப்படுத்துவது சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது" என்றார். ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் ருச்சிரா காம்போஜ் தலைமையில் இந்த விவாதம் நடைபெற்றது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதில் இருந்தே இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதரை அவரது பதவியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?Tiruppur Murder : ’’புருஷன் சாவுக்கு நீங்கதான் காரணம்’’மனைவி சரமாரி கேள்வி!திக்குமுக்காடிய அமைச்சர்..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Embed widget