Girl Child Day: பெண் குழந்தைகள் தினம்: மாணவிகளுக்கான சிறப்பான திட்டங்கள் ஒரு அலசல்..
இன்று பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாணவிகளுக்காக இந்தியாவில் இருக்கும் திட்டங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக சமூகத்தில் அவர்களின் நிலையை மேம்படுத்துவதும் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில், இந்தியாவில் உள்ள மாணவிகளுக்கான சிறந்த 5 உதவித்தொகை திட்டங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
பெண்களுக்கான AICTE பிரகதி உதவித்தொகை:
நோக்கம்: பெண்களுக்கான AICTE பிரகதி ஸ்காலர்ஷிப் என்பது இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வியைத் தொடர பெண்களை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
தகுதி நிபந்தனைகள்: விண்ணப்பதாரர்கள் மாநில/மத்திய அரசின் கீழ் இருக்கும் AICTE திட்டம் மூலம் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ முதலாம் ஆண்டு பயில வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. குடும்ப வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், இரண்டு பெண் குழந்தைகள் வரை அனுமதி வழங்கப்படுகிறது. திருமணமான பெண்களுக்கு, பெற்றோர்/கணவனின் பெற்றோர்களின் அதிகபட்ச வருமானம் கருதப்படுகிறது.
உதவித்தொகை:
கல்விக் கட்டணம்: ரூ. 30,000/- வரை அல்லது படிப்பிற்கான கட்டணம் ரூ.30,000 கீழ் இருந்தால் அதனை கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
இன்சிடெண்டல் தொகை: மாதம் ரூ.2000 என ஆண்டுக்கு 10 மாதம் வழங்கப்படுகிறது.
பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை
நோக்கம்: பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை, முன்பு மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை என இருந்தது. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த சிறந்த பெண் மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி/கல்லூரி கட்டணம், பாடத்திட்ட புத்தகங்கள், எழுதுபொருட்கள்/உபகரணங்கள் மற்றும் போர்டிங்/லாட்ஜிங் கட்டணங்கள் வழங்கப்படுகிறது.
தகுதி நிபந்தனைகள்: முந்தைய தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூபாய் ரூ. 2.00 லட்சம் கீழ் இருக்கும் சிறுபான்மை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உதவித்தொகை: 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படுகிறது. அதேபோல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படுகிறது.
ஒற்றைப் பெண் குழந்தைக்கு முதுகலைப் பட்டதாரி இந்திரா காந்தி உதவித்தொகை:
நோக்கம்: இந்த உதவித்தொகையானது தொழில்முறை அல்லாத முதுகலை கல்வியைத் தொடரும் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகுதி நிபந்தனைகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது முதுகலை கல்லூரிகளில் வழக்கமான, முழுநேர முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெற்ற ஒற்றைப் பெண் குழந்தைகளுக்குப் இது பொருந்தும். தொலைதூரக் கல்விப் பயிலும் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
உதவித்தொகை: முதுகலை படிப்பின்போது இரண்டு வருட காலத்திற்கு மாதம் ரூ. 2000 வழங்கப்படும்.
ஒற்றைப் பெண் குழந்தைக்கான சிபிஎஸ்இ மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்:
நோக்கம்: இத்திட்டம், பெண் குழந்தைகளுக்கான கல்வியை ஊக்குவிப்பதில் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரித்து திறமையான மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.
தகுதி நிபந்தனைகள்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பில் 60% அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற, சிபிஎஸ் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புகளில் படிக்கும் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் வழங்கப்படும். ஆனால் மாத பள்ளி கட்டணம் ரூ.1,500 மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: ஒரு மாதத்திற்கு ரூ. 500 என அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
பெண் விஞ்ஞானி திட்டம்-பி (WOS-B)
நோக்கம்: DT'S மகளிர் விஞ்ஞானி திட்டம்-பி, பெண்கள் எஸ்&டி வேலைகளில் இருந்து விடுப்பு எடுத்தபின் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
தகுதி நிபந்தனைகள்: 27-57 வயதுடைய பெண்களுக்கு S&T பகுதிகளில் தகுதிகள் உள்ளன. நிரந்தர ஊழியர்கள் இதில் விண்ணப்பிக்க அனுமதியில்லை.
உதவித்தொகை:
பி.எச்.டி. அல்லது அதற்கு இணையான படிப்பு: மாதம் ரூ.55,000 வழங்கப்படும்.
M.Phil./MTech அல்லது அதற்கு இணையான படிப்பு: மாதம் ரூ.40,000 வழங்கப்படும்
எம்.எஸ்.சி. அல்லது அதற்கு இணையான படிப்பு: மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.