Narayan Rane Gets Bail: பகலில் கைதான மத்திய அமைச்சர் நாராயண் ரானே; நள்ளிரவில் ஜாமீனில் வந்தார்!
மகாராஷ்ட்ரா முதலமைச்சரை கன்னத்தில் அறைவேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்ட்ரா முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நள்ளிரவில் ஜாமின் வழங்கப்பட்டது.
மகாராஷ்ட்ரா முதலமைச்சரை கன்னத்தில அறைவேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மஹாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனையடுத்து மஹாத் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக, சுதந்திர தின விழாவில் நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து ராணே அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது. மேலும், உத்தவ் தாக்கரேவை அவமதித்தாக கூறி நாராயண் ராணேவுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், மும்மை, நாசிக், புனே பகுதிகளில் பாஜக அலுவலங்களில் மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீச் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் மீது நாசீக் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை ரத்தினகிரி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறிய செயலாகும் என்றும், இதுபோன்ற கைது நடவடிக்கையை கண்டு அச்சப்படமாட்டோம் எனவும் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேலும், விவகாரத்தில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை கடுமையாக சாடினார். பாஜகவினர் பலரும் இந்த விவகாரத்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்தபோது மாநில போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, மூன்றாவதாக ஒரு மத்திய அமைச்சர் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக மோதலின் அடுத்தகட்டமாக இந்த கைது நடவடிக்கையும் நடந்துள்ளது. சிவசேனாவின் இந்த கைது நடவடிக்கைக்கு பாஜக என்ன மாதிரியான எதிர்வினையாற்றப்போகிறது என்பதை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#UPDATE | Mahad Magistrate Court has granted bail to Union Minister Narayan Rane on furnishing a personal bond of Rs 15,000 in connection with his alleged statement against Maharashtra Chief Minister Uddhav Thackeray pic.twitter.com/OlwbVlQc3Y
— ANI (@ANI) August 24, 2021