UP Election 2022: ஆம், தீவிரவாதத்துடன் எனக்கு நெருக்கம் இருக்கிறது! பிரியங்கா காந்தி காட்டம்
தற்போதைய தேர்தலில் தீவிரவாதம் போன்ற தொடார்பில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - பிரியங்கா காந்தி
நாட்டை அழிக்கும் தீவிரவாதத்துடன் எனக்கு நெருக்கம் இருக்கிறது. நாட்டுக்காக உயிர்நீத்த எனது, குடும்ப உறுப்பினர்கள் தேசிய தியாகிகள் என உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார்.
मुँहतोड़ जबाब. pic.twitter.com/Unhj07bQ9v
— Acharya Pramod (@AcharyaPramodk) February 26, 2022
முன்னதாக, தலைநகர் லக்னோவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், சமஜாவாடி கட்சியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோடி, " 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளில் தீவிரவாதிகள் மிதிவண்டியின் மூலம் தான் தங்கள் நாசவிலைகளை செய்தனர். மிதிவன்டிக்கும், தீவிரவாதத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் தற்போது தான் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. ஒரு காலத்தில் மாபியா மற்றும் தீவிரவாதம் கட்டுப்பாடின்றி இருந்தது. முந்தைய ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளை பேணிக் காத்து வந்தனர். தற்போது, அவை சட்டத்தின் பிடியில் உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். பிரியங்கா காந்தி இதுகுறித்து பேசுகையில், பாஜக போன்ற மக்களை பிரித்தாளும் சக்திகளுக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறோம். ஏழ்மை, பாலின பாகுபாடு உள்ளிட்ட சமூக சீர்கேடுகளை அகற்றும் வளர்ச்சி அரசியலை நோக்கி நகர்கிறோம். தற்போதைய தேர்தலில் தீவிரவாதம் போன்ற தொடார்பில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் 'தீவிரவாதம்' என்ற அவர்களின் அச்சுறுத்தும் துதிபாடலை எங்களால் ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.
பிரயங்கா காந்தியின் இந்த கருத்துக்கு, பாஜக மூத்தத் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிதி ராணி தேர்தல் பரப்புரையின் போது விமர்சித்து வந்தனர். ஸ்மிதி ராணி கூறுகையில், " பிரியங்கா காந்திக்கும், தீவிரவாதத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இன்று, இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக பேசிய பிரியங்கா காந்தி, " நாட்டை அழிக்கும் தீவிரவாதத்துடன் எனக்கு உறவு இருக்கிறது. நாட்டுக்காக உயிர்நீத்த எனது, குடும்ப உறுப்பினர்கள் தேசிய தியாகிகள். எனது, தந்தை தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். எனது பாட்டியும் கூட. இத்துடன், உங்கள் பேச்சை நிறுத்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.
உத்தர பிரதேச ஐந்தாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களைச் சேர்ந்த 61 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 90 பெண்கள் உட்பட 692 வேட்பாளர்கள் கலத்தில் உள்ளனர்.