அது எப்படி மறப்ப..? - அடித்து உதைத்த மனைவி! போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற சம்பவம்! கணவர்களே உஷார்!
மும்பையில் திருமண நாளை மறந்ததால் பெற்றோரை அழைத்து வந்து கணவரை தாக்கிய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
![அது எப்படி மறப்ப..? - அடித்து உதைத்த மனைவி! போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற சம்பவம்! கணவர்களே உஷார்! Mumbai women bashes husband for forgetting wedding aniversary date police file complaint அது எப்படி மறப்ப..? - அடித்து உதைத்த மனைவி! போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற சம்பவம்! கணவர்களே உஷார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/97b74aa64107baac9b2c481c69e3d18f1677036282392333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Mumbai : மும்பையில் திருமண நாளை மறந்ததால் பெற்றோரை அழைத்து வந்து கணவரை தாக்கிய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பையின் காத்கோபர் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் நாங்க்ரே (32). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்பனா (27) என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. விஷால் அதே பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். கல்பனா ஒரு ஹோட்டலில் வேலை பார்தது வருகிறார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பிப்ரவரி 18ஆம் தேதி திருமண நாள் வந்துள்ளது. ஆனால் விஷால் தனது திருமண நாளை மறந்துவிட்டதால் மனைவிக்கு வாழ்த்துதல் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி கல்பனா அவருடன் சண்டை போட்டுள்ளார். விஷாலும் வழக்கமாக ஏற்படும் சண்டை தான் என்று நினைத்து அவரை சமாதானப்படுத்தி உள்ளார்.
ஆனால் பிரச்சனை அதோடு நிறைவு பெறவில்லை. மறுநாள் காலை விஷால் வேலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். மாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தை கழுவிக் கொண்டிருந்தபோது, கல்பனாவும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் கல்பனா, விஷாலுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர், தனது சகோதரர் மற்றும் பெற்றோருக்கு போன் செய்து இது பற்றி தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து, உடனடியாக காத்கோபர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கல்பானா குடும்பத்தினர் வந்து, விஷாலை அடித்து உதைத்ததோடு மட்டுமின்றி, அவரின் இருசக்கர வாகனத்தையும் கல்பானாவின் சகோதரர் அடித்து உதைத்துள்ளார். இந்த பிரச்சனையானது இத்தோடு நிற்காமல் சம்பவத்தன்று இரவு விஷாலின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கல்பானாவிடம் பிரச்சனையை தீர்த்து வைக்க சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கல்பனா கடுமையான வார்த்தைகளால் அவரை பேசியதோடு மட்டுமின்றி, கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர், இதை தட்டிக் கேட்ட விஷாலையும் அடித்து உதைத்துள்ளார். இதனால் இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை அடுத்து மனைவி கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது விஷால் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் மனைவி கல்பனா, அவரது சகோதரர், பெற்றோர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விசாரணைக்கு பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். திருமண நாளை மறந்த கணவருக்கு இதுபோன்ற நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)