மேலும் அறிய

குற்றவாளியை பிடிக்க மாறுவேடம்.. சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

தபால்காரர்கள் மற்றும் பழ விற்பனையாளர்கள் போல் வேடமிட்டு சென்று மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்தாண்டு குடியிருப்பு ஒன்றில் இருந்து தங்கம் மற்றும் 40,000 ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்த நபர்களை, தபால்காரர்கள் மற்றும் பழ விற்பனையாளர்கள் போல் வேடமிட்டு சென்று மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இரண்டு இணை குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முக்கிய குற்றவாளியான சல்மான் சுல்பிகர் அன்சாரி, அலிபாபா என்ற பெயரில் ட்ரூகாலர் செயலியில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

அவர் தனது அடையாளத்தை மறைக்க இந்த பெயரைப் பயன்படுத்தியதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஸ்மிதா பாட்டீல் கூறுகையில், "கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் 31 ஆம் தேதி, தஹிசார் கிழக்கில் உள்ள குடியிருப்பு வளாகம் கொள்ளையடிக்கப்பட்டது. விசாரணையின் போது, ​​176 சிசிடிவி கேமராக்களில் இருந்த காட்சிகளையும் 97 சிம் கார்டுகளின் இருப்பிடங்களையும் போலீசார் கண்காணித்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்ட பிறகும், எந்த ஆதாரமும் கிடைக்காததால், சிசிடிவிகளை சோதனை செய்யவும், குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சிம் கார்டுகளைக் கண்காணிக்கவும் தொடங்கினர். 

கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சிம் கார்டுகள் இருந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, நொய்டாவில் அவற்றைக் கண்காணித்தோம்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண, பழ விற்பனையாளர்கள் மற்றும் தபால்காரர்கள் போல் போலீசார் மாறுவேடமிட்டு சென்றனர். மேலும், இரண்டு குற்றவாளிகளான ஹைதர் அலி சைஃபி மற்றும் திருடப்பட்ட தங்கத்தை வாங்கிய நகை வியாபாரி குஷால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் உத்தரபிரதேசத்தில் வசிப்பவர்கள். திருடப்பட்ட தங்கம் மற்றும் 18 லட்ச ரூபாயும் மீட்கப்பட்டது" என்றார்.

திரைப்படத்தில் வருவது போல பழ விற்பனையாளர்கள் மற்றும் தபால்காரர்கள் போன்று வேடமிட்டு சென்று குற்றவாளிகளை காவல்துறை பிடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அதேபோல, குற்றவாளிகளை பிடிக்க 176 சிசிடிவி காட்சிகளயும் 97 சிம்கார்டுகளையும் காவல்துறை ஆய்வு செய்திருப்பது கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில், ஒடிசாவில் பாலிவுட் திரைப்படமான 'தூம்' பாணியில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட திருடர்கள், நபரங்பூர் மாவட்டத்தின் உயர்நிலைப் பள்ளியில் கணினிகள் மற்றும் பிற மின்னணுப் பொருட்களைத் திருடிச் சென்றனர். 

நபரங்பூர் காதிகுடா பகுதியில் உள்ள இந்திராவதி திட்ட மேல்நிலைப் பள்ளியை திறந்தபோது, ​​பள்ளி தலைமையாசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கணினிகள், பிரிண்டர், பிரிண்டர் இயந்திரம், எடை இயந்திரம் மற்றும் ஒலிப்பெட்டி திருடுபோனது தெரிய வந்தது.

பள்ளியின் பிளாக் போர்டில் 'தூம் 4', 'நாங்கள் திரும்புவோம் விரைவில் வருவோம்' என்று எழுதப்பட்டிருந்தது பள்ளி அதிகாரிகளை உலுக்கியது. "முடிந்தால் எங்களைப் பிடிக்கவும்" என திருடர்கள் பிளாக் போர்டில் ஒடியா மொழியில் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget