Fire Accident : குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து... அலறியடித்து மக்கள் ஓட்டம்: மும்பையில் பரபரப்பு...
மும்பையில் தாராவி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Fire Accident : மும்பையில் தாராவி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தாராவி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு இன்று அதிகாலை 4.30 மணியவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் குடியிருப்புகள் இருந்த மக்கள் அனைவரும் அலறியடித்து சென்றனர். இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Maharashtra | Fire breaks out in the slums of Kamla Nagar in Mumbai. Ten fire tenders are at the spot. pic.twitter.com/IdPwxSCSo6
— ANI (@ANI) February 22, 2023
போக்குவரத்து மாற்றம்
இதுகுறித்து காவல்துறை தெரிவிக்கையில், "தாராவி பகுதியில் உள்ள குடியிருப்பில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை யாருக்கும் எந்த காயங்களும் இல்லை. குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்
Due to the fire at Dharavi Kamla Nagar, 90 feet road has been closed and the traffic has been diverted to Santh Rohidas Marg.
— Mumbai Traffic Police (@MTPHereToHelp) February 22, 2023
Instead of going to 60 feet road from T junction, the traffic has been diverted to Raheja Mahim. #MTPTrafficUpdates
"தாராவி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தீ விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தாராவி பகுதியில் போக்குவரத்து சேவை மாற்றப்பட்டுள்ளது. தாராவி கமலா நகரில் ஏற்பட்ட தீ விபத்தால், 90 அடி சாலை மூடப்பட்டு, சாந்த் ரோஹிதாஸ் மார்க்கில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டி சந்திப்பில் இருந்து 60 அடி சாலையில் செல்லாமல் ரஹேஜா மாஹிம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேறு வீடுகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.