Crime : காதலியை தண்ணீர் தொட்டியிலிருந்து கீழே தள்ளி கொல்ல முயற்சி..! காதலனை கைது செய்த போலீஸ்...
மும்பை புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியிலிருந்து தள்ளிவிட்டு தனது காதலியை கொல்ல முயன்றதாக 25 வயது இளைஞரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை தாஹிசரின் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் இருந்து தள்ளிவிட்டு தனது காதலியை கொல்ல முயன்றதாக 25 வயது இளைஞரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர், அதில் அவர் படுகாயமடைந்தார்.
18 அடி உயரம் :
குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பர் ஒருவர், அவர் வசிக்கும் கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது, என்றார். பாதிக்கப்பட்ட பிரியங்கி சிங், 15 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து 18 கீழே விழுந்ததாக தஹிசார் காவல் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. "பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் இருந்ததால், அவர்கள் தண்ணீர் தொட்டியின் மீது அமர்ந்திருந்தபோது பிரியங்கியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் ஆத்திரத்தில் அவளை தொட்டியில் இருந்து தள்ளிவிட்டார்," என கூறப்பட்டிருந்தது. சிகிச்சைக்காக மருத்துவமணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பிரியங்கி, முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் போரிவலியில் (மேற்கு) வசிப்பவர் மற்றும் ஒரு பிபிஓ (bpo) ஊழியரும் ஆவார், பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்துடன் மலாட்டில் வசித்து வந்தார்.
பள்ளி நண்பர்கள் :
குற்றஞ்சாட்டப்பட்டவரின் நண்பரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு வாக்குமூலம் பெறும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவத்திற்குப் பிறகு பிரியங்கியை முதலில் அவரது போரிவ்லி பிளாட்டுக்கும், பின்னர் காலை 8 மணியளவில் அவரது மலாட் வீட்டிற்கும் அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பற்றிய தகவல்களை சேகரித்து வருவதாகவும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியாததால், கட்டிடத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் பள்ளிப்பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள். பின்னர், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று மாதங்களுக்கு முன்பு பிபிஓ நிறுவனத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரிடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக மோதல்கள் வந்த நிலையில் இம்முறை அது மோசமடைந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 307 (கொலை முயற்சி) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வியாழக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விலை குறைந்த ஆடை.. திருமணத்தையே நிறுத்திய மணப்பெண்.. அதிர்ந்து நின்ற உறவினர்கள்..