மேலும் அறிய

கிணற்றில் விழுந்த சிறுவன்... வேடிக்கை பார்த்த கும்பலால் இடிந்த கிணறு.. 11 பேர் பலி!

மத்தியப் பிரதேசத்தில் கிணற்றின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூபாய் 2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கிணற்றில் விழுந்த சிறுவன் காப்பாற்றுவதை வேடிக்கை பார்த்த 11 பேர் கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து கிணற்றின் உள்ளே விழுந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

“மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது விதிஷா மாவட்டத்தின்  கன்ஞ் பசோடா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சந்தீப், கடந்த 15-ந் தேதி மாலை அவனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் நீர் இறைக்கச் சென்றுள்ளான்.

50 அடி வரை உயரம் கொண்ட அந்த கிணற்றில் 20 அடி வரை தண்ணீர் இருந்துள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் சந்தீப் கிணற்றின் உள்ளே தவறி விழுந்துவிட்டான். இதைப்பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர் சிலர் உடனடியாக கிணற்றின் உள்ளே குதித்தனர். மேலும், சிலர் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சிறுவன் கிணற்றின் உள்ளே விழுந்த தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் பலரும் கிணற்றின் பக்கவாட்டு சுவரில் சுமார் 50 நபர்கள் வரை அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த கிணறு மிகவும் பழமையான கிணறு என்பதாலும், பக்கவாட்டு சுவர் பாழடைந்த நிலையில் இருந்ததாலும் அவர்களின் பாரம் தாங்காமல் சுவர் திடீரென இடிந்தும், மண் சரிந்தும் கிணற்றின் உள்ளே விழுந்தது.


கிணற்றில் விழுந்த சிறுவன்... வேடிக்கை பார்த்த கும்பலால் இடிந்த கிணறு.. 11 பேர் பலி!

இதனால், பக்கவாட்டுச் சுவற்றில் அமர்ந்திருந்த 29 பேர் கிணற்றின் உள்ளே நுழைந்தனர். இதையடுத்து, உடனடியாக மீண்டும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் உள்பட 30 பேர் கிணற்றில் உள்ளே விழுந்து விட்டதாலும், கிணறு சரிந்து பலரும் உள்ளே சிக்கிக்கொண்டதாலும் தேசிய பேரிடர் மீட்பு படைக்கும், மாநில பேரிடர் மீட்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் 15-ந் தேதி மாலை முதல் 16-ந் தேதி மாலை முதல் தொடர்ச்சியாக மீட்பு பணியில் ஈடுபட்டு 19 பேரை உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்த 11 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.  மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய பிரதேச அரசு சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அந்த மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget