வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
நாம் தனித்துவமானவராக இருக்கிறோம் என்று தெரிந்துவிட்டால் நமது வெற்றியை தடுக்க பல தடைகளை உருவாக்குவார்கள் என மாணவர்களிடம் முதல்வர் விஜய் பேசினார்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில், முதல் கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்
இந்த மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 180 மாணவர்களுக்கு மாணவர்களுக்கு சான்றிதழ்களும் ஊக்கத்தொகையும் முதல்வர் விஜய் வழங்கி அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
ஓட்டுக் கேட்க வரவில்லை
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் “ அன்பான நண்பா நண்பீஸ் அனைவருக்கும் வணக்கம். உங்களுடைய பெற்றோர்களுக்கு என்னுடைய வணக்கம். வெறும் வணக்கம் சொன்னால் போதாது. ஒரு மேடைக்கு எப்போது உறுதியான அடித்தளம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இந்த மேடைக்கு அந்த உறுதியான அடித்தளமே நீங்கள்தான். உங்களுடைய அளவு கடந்த அன்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். நான் இங்க ஒரு முதலமைச்சராக எல்லாம் வரவில்லை. உங்களுடைய அண்ணனாக தான் வந்திருக்கிறேன். நான் இங்கே அரசியல் பேச வரவில்லை. ஓட்டு கேட்க வரவில்லை. கட்சியைப் பற்றி எல்லாம் பேச வரவில்லை. இப்போதைக்கு உங்களுக்கு இந்த அரசியல் கட்சி எல்லாம் தேவையில்லை. முதலில் உங்களுக்கு பிடித்த மாதிரியான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு தமிழ்நாட்டைப் பற்றி யோசிக்கலாம். உங்களை நம்பிதான் உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள் . நானே உங்களை நம்பித்தான் இருக்கிறேன். தமிழ்நாடே உங்களை நம்பிதான் இருக்கு.
தனித்தன்மையை வளர்ந்துக் கொள்ளுங்கள்
ஒரு சின்ன அட்வைஸ் மட்டும் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களுக்கென ஒரு தனித்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். தனித்தன்மையோடு ஒருத்தர் இருக்கிறார் என்று தெரிந்துவிட்டால் அது நிறைய பேருக்கு பிடிக்காது. எப்படிடா உங்களுக்கு தடை போடலாம் என்று பார்ப்பார்கள். எப்போலாம் உங்களை தடுக்க நினைக்கிறார்களோ அப்போது நீங்கள் ஜெயிக்கப் போறீங்க என்பதை அவர்கள் உறுதிபடுத்திவிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால் அதையெல்லாம் தாண்டி நீங்கள் ஜெயித்துவிட்டால் உங்கள் வெற்றியைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவார்கள். வெந்து தணிந்து காடு என்பது போல் தான். உறுதியாக இருங்கள். கன்விக்ஷன் மற்றும் கான்ஃபிடன்ஸ் இருந்தாலே நிச்சயம் வெற்றிதான்.
போதைக்கு அடிமையாகாதீர்கள்
அதே நேரம் நமது நண்பா நண்பிஸ் இடையில் ஒரு பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். ஆனால் எந்த காரணத்திற்காகவும் லஞ்சம், ஊழல் , போதைப்பொருட்களுக்கு சென்று விடாதீர்கள். உங்களுடன் நான் இருக்கிறேன் என்னுடன் நீங்கள் இருக்கிறீர்கள். கான்ஃபிடண்டா இருங்க. நல்லது மட்டுமே நடக்கும் . நன்றி” என்று கூறினார்
ட்ரெண்டிங் செய்திகள்






















