தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
MK Stalin: இவ்வளவு வீக்கான முதலமைச்சரை இதுவரை தமிழ்நாடு பார்த்தது இல்லை. பத்திரிகையாளர்களை கண்டாலே பயந்து ஓடுகிறார் முதலமைச்சர் விஜய் என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கோவையில் கடந்த திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்றது. இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து முதல்வர் விஜய் இந்த பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார். இதனிடையே பெரியார் அறிவுலகம் அமைத்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் சார்பில் நன்றி மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நூற்றுக்கு நூறு தூய சக்தி என்பவர்களின் ஆட்சி நாளுக்கு நாள் துர்நாற்றம் வீசுகிறது. 100க்கு 100 தூய சக்தி என்று சொல்பவர்களின் ஆட்சியில் நாளுக்கு நாள் துர்நாற்றம் வீசுகிறது. முதல்வர் பதவி என்பது 10 to 5 ஆபீஸ் வேலை இல்லை. அதற்கு நாம் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்றார்.
வீக்கான முதல்வர்
இவ்வளவு வீக்கான முதலமைச்சரை இதுவரை தமிழ்நாடு பார்த்தது இல்லை. பத்திரிகையாளர்களை கண்டாலே பயந்து ஓடுகிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சர் எந்த தவறுக்காவது பொறுப்பேற்று விளக்கமோ, பதிலோ கொடுக்கிறாரா? இல்லை. எதைக் கேட்டாலும் திமுக என்பதே முதலமைச்சர் விஜயின் பதிலாக உள்ளது.
இதையும் படிங்க: Dummy CM-க்கு வெங்காயம் வாங்கக்கூட.. மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? காய்ச்சி எடுக்கும் உதயநிதி
அவதூறு பரப்பி வெற்றி பெற்றவர் விஜய்
சினிமாவில் மற்ற நடிகர்கள் குறித்து அவதூறு பரப்பி வெற்றி கண்டவர் விஜய். சினிமாவை போல அரசியலிலும் அவதூறு பரப்பி ஒருமுறை வென்றுவிட்டார். மாதம் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கஷ்டத்தில் மக்கள் இருக்கிறார்கள்.
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுவிட்டது. விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். தவெகவினர் செய்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல, கேவலமான அரசியல். அவதூறுகள், பொய்கள், போலி வீடியோக்கள் பரப்பி ஆட்சி செய்வது ஆரோக்கியமான ஆட்சி அல்ல. கொலையும் பாலியல் வன்கொடுமையும் தான் தவெக ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் தவறான மாற்றங்கள் என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரே மாதத்தில் மின்வெட்டு பிரச்சனை
ஜோதிடர் சொன்ன தேதியில் பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் மின்வெட்டு பிரச்சனை வந்துவிட்டது. தவெக ஆட்சியால் இதுவரை மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எரிக்க முடியாத அளவுக்கு மின்வெட்டு நிலவுகிறது. கார்ப்பரேட் பவர் சென்டர்கள் தான் முதல்வர் விஜய் ஆட்சியை ஆட்டி படைக்கின்றனர். 5 ஆண்டுகளில் வாங்க வேண்டிய அவமானத்தை 5 மாதங்களில் பெற்றுள்ளது தவெக அரசு. குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்குவதை கிடப்பில் போட்டு அதிக விலைக்கு வாங்கியதை நியாயப்படுத்துகின்றனர். சென்னை, தூத்துக்குடி என நகரின் மையப்பகுதிகளில் சர்வ சாதாரணமாக கொலை நடைபெறுகிறது. தொடர்ந்து சிறுமிகள் காணாமல் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























