மேலும் அறிய

Rahul Gandhi: ராகுல் காந்திக்கு எம்.பி. பதவி தருவதில் இழுபறி? பாஜகவின் திட்டம் இதுதான்...காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு...!

ராகுல்காந்தி மீது குஜராத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டதில் உற்சாகத்தில் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

Rahul Gandhi: ராகுல்காந்தி மீது குஜராத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டதில் உற்சாகத்தில் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். 

2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பேச்சைக் கண்டித்து குஜராத் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்த குஜராத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற விதிகள் காரணமாக ராகுல்காந்தியின் பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராகுல்காந்தி. இந்த வழக்கில் தான் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராகுல்காதி மீதான இரண்டு வருட சிறை தண்டனை உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். இதனால் ராகுல்காந்தி மீண்டும் எம்பியாக தொடர்வார். 

மழைக்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்போது உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் இந்த தீர்ப்பு காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 37 மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக முடிவு செய்திருந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Rahul Gandhi: ராகுல் காந்திக்கு எம்.பி. பதவி தருவதில் இழுபறி? பாஜகவின் திட்டம் இதுதான்...காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு...!

தொடர் அமளி காரணமாக விவாதங்கள் ஏதும் நடைபெறாமல் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டுமே தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் ஜூலை 26ம் தேதி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று விவாதத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒருநாள் கூட கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதே போல பாஜகவினரும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளமளிப்பதை விரும்பவில்லை. சபாநாயகர் ஜக்தீப் தங்கர் கூட பிரதமர் மோடியை அவைக்கு வந்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட முடியாது என்று கூறியிருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளின் வாதங்களுக்கு பிரதமர் மோடி ஆகஸ்ட் 10ம் தேதி பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் விளக்கமளிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வருகிறார் ராகுல்காந்தி. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ராகுல்காந்தி கடுமையாக பேசி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி என்ன பேசுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Rahul Gandhi: ராகுல் காந்திக்கு எம்.பி. பதவி தருவதில் இழுபறி? பாஜகவின் திட்டம் இதுதான்...காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு...!

ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முதலில் அவர் நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்ற செயலகத்திடம் சமர்ப்பித்து ராகுல்காந்தியை மீண்டும் எம்பியாக நியமிக்கும் கோரிக்கைக்கான மனுவையும் சமர்ப்பித்துவிட்டார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு திங்கள் கிழமை அல்லது செவ்வாய் கிழமை காலைக்குள் ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்படி அங்கீகரிக்கப்பட்டல் மட்டுமே ராகுல்காந்தியால் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும். ராகுல்காந்திக்கு  சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைந்தண்டனை விதித்து தீர்ப்பளித்த சிறிது நேரத்திலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது நடாளுமன்ற விவகாரங்கள் துறை. ஆனால், உடனடியாக அவரை எம்பியாக சேர்த்துக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இப்படியான சூழ்நிலையில், ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை ராகுல்காந்தி அனுமதிக்கப்படவில்லையென்றாலும் ராகுல்காந்தி மீது பாஜகவிற்கு பயம். அதனால் தான் அவரை அனுமதிக்கவில்லை என்ற கோணத்திலும் செய்திகளை பரப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget