மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: வாங்க தெரிஞ்சுக்கலாம் உலகம் முதல் உள்ளூர் செய்திகள் வரை.. ஏபிபியின் தலைப்பு செய்திகள்..!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- பிளஸ் 2 தேர்வு முடிவில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி : விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்து அசத்தல்
- அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் : டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு
- வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் நாளை புயலாக மாறும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் மக்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. 288.38 கோடி திருட்டு - ரூ. 106 கோடியை முடக்கியுள்ளதாக சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் தகவல்
- கடலூரில் இருசக்கர வாகனம் மீது அமைச்சர் பொன்முடி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
- ”தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளை தோனி.." சென்னைக்காக தொடர்ந்து ஆட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பம்
- மாணவியின் உள்ளாடையைக் கழட்ட கட்டாயப்படுத்திய மயிலாப்பூர் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
- திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநரை தேடித்தேடி மனு கொடுத்தவர்கள் இன்றைக்கு ஆளுநரை விமர்சிக்கிறார்கள் - ஆளுநர் தமிழிசை
- தமிழகத்தில் உள்ள அமைச்சர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக செயல்பட்டு வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.
- மரக்காணத்தில் இந்து அறநிலைத்துறையை கண்டித்து வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா:
- வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ; தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைப்பதா? யூடியூபருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
- கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்வு - 7 பேர் கவலைக்கிடம்
- இயல்பு நிலைக்கு திரும்பியது மணிப்பூர் - 3 மணிநேர ஊடரங்கு தளர்வு
- கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப்பதிவு - தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவு
- டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போலீசாரின் தடுப்பான்களை உடைத்தெறிந்து விட்டு விவசாயிகள் முன்னேறி வருகின்றனர்.
- சர்ச்சைக்குள்ளான தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளில், குஜராத்தில் 40,000 பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
- ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் : ஜெ.பி நட்டா பேச்சு
- இந்திய விமானப்படைக்கு சொந்தமான MIG -21 ரக விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே நேற்று விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழப்பு
உலகம்:
- ரஷ்யாவின் இரவு நேர தாக்குதல்; 35 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்
- பாகிஸ்தான் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 199 இந்திய மீனவர்களை அதிகாரிகள் வரும் வெள்ளிக்கிழமை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பெரு நாட்டில் தங்கச்சுரங்கம் தீப்பிடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.
- தைவானுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
விளையாட்டு:
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான்கிஷான் சேர்க்கப்பட்டுள்ளார்.
- ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான விவ்ராந்த் ஷர்மா, ராஜஸ்தானுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார்.
- ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பிராவோவின் சாதனையை, இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹஸ் சமன் செய்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion