மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நாடு, நகரம், உலகம், உங்களை சுற்றி என்ன நடந்தது..? ஏபிபியின் காலை 7 மணி தலைப்புச்செய்திகள்!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- சாதி, மத ரீதியாக பிரித்து பார்த்தால் திராவிட மாடல் தெரியாது - ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி
- தமிழ்நாட்டில் 4 நகரங்களில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகளுக்கு தனி செயலி உருவாக்க வேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாட்டில் முதன்முறையாக காஞ்சிபுரம் ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு அமல் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் துவக்கி வைத்தார்
- ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கு; அதிக பணம் வசூலித்து கொடுத்த 200 பேரிடம் விசாரணை - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்
- மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது - அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு
- மக்கள் விரோத நடவடிக்கைகள் தான் இன்றைய திமுக அரசின் இரண்டு ஆண்டுகால ஆட்சியின் சாதனையாக பார்க்க முடிகிறது என்று சசிகலா தெரிவித்திருக்கிறார்.
- 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்காக பல போராட்டங்களோடு அவமானங்களை சந்தித்து வருகிறோம் - பாமக தலைவர் அன்புமணி
- திமுக அரசு அறிவிப்பு கொடுத்து அதை திரும்ப பெறக்கூடிய அரசாகத்தான் உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
- இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- மக்களவை தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க குறைந்தபட்ச செயல் திட்டம் - சரத் பவார் வலியுறுத்தல்
- இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது.
- பெங்களூருவில் திறந்த காரில் பிரதமர் மோடி 26.கி.மீ பிரமாண்ட ரோடு ஷோ பயணம்
- எனக்கு பயங்கரவாதத்தின் விளைவு பற்றி பிரதமர் நரேந்திர மோடியைவிட நன்றாகவே தெரியும். நான் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளேன் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 113 பேருக்கு கொரோனா; 3 பேர் உயிரிழப்பு
உலகம்:
- காங்கோவில் ஏற்பட்ட கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 203 பேர் உயிரிழந்துள்ளனர்.
- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நிலையை மீட்டெடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
- ஈரானில் 25 ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய இந்திய அதிகாரிக்கு 3 ஆண்டு விதித்து அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆலோசகராக இந்திய வம்சாவளி நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
- ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மாலை 4 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் , இரவு 7 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத இருக்கின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion