மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

7 AM Headlines: என்னதான் நடந்தது நேற்றைய நாளில்..? சுவையான டீ யுடன் சுடச்சுட காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..!

Headlines கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைகளில் ஏன் வெஸ்டர்ன் டாய்லென் வைக்கவில்லை - ஒப்பந்ததாரரை திட்டிய அமைச்சர் பொன்முடி
  • தானியங்கி  மது விற்பனை நிலையங்கள் குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் இதற்காகவா தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது எனவும் அன்புமணி கேள்வி தெரிவித்துள்ளார்.
  •  'உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பழனிசாமி" என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
  • அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் 2030 ஆண்டில் 52 சதவீதமாக அடைய வேண்டிய இலக்கை 2020க்குள் கொண்டு வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
  • தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞராக இருப்பதால் தமிழகத்தில் விளையாட்டில் மாணவர்கள் உத்வேகம் அடைந்துள்ளது என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். 
  • ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக கூறிய திமுகவின் ஆர்.எஸ் பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
  • கமல்ஹாசனை ஒரு கட்சியின் தலைவராக பார்க்க முடியாது. ஊழல் கரை படிந்த திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் என்பது தான் அவர் நிலைமை என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
  • கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி தந்ததை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தப்படும் என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா:

  • பெங்களூருவில் 12ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் வீடு வாடகைக்கு தர மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • அண்மையில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து, தலைமைச் செயலாளர் இறையன்பு, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  • ஏ.என்.ஐ ட்விட்டர் கணக்கை வைத்திருப்பவர் 13 வயதுக்குட்பட்டவர் எனக் கூறி ஏ.என்.ஐ செய்தி நிறுவன கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கி, மீண்டும் செயல்பட அனுமதித்தது.
  • விவாகரத்துக்கு பிறகு, இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது ஏமாற்றுவதாக கருத முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
  • இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் துயரமான விஷயம். கேலி செய்வதற்கான விஷயம் அல்ல என பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் சந்திராயன் -3 திட்ட செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ இணை இயக்குனர் எஸ்.வி.சர்மா தெரிவித்துள்ளார். 
  • டெல்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

உலகம்:

  • பிரதமர் மோடி உரையாற்றும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
  • ஈக்வடார் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
  • பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
  • ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

விளையாட்டு:

  • முன்னாள் இந்திய தொடக்க வீரர் வாசிம் ஜாஃபரின் முதல் தர கிரிக்கெட்டில் சதங்கள் அடித்த சாதனையை சேதேஷ்வர் புஜாரா தற்போது முறியடித்துள்ளார். 
  • ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.
  • ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணியும், மும்பை மற்றும் ராஜஸ்தான் அணியும் மோத இருக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Embed widget