மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உலகத்தை சுற்றி என்ன நடந்தது..? ஒரு நிமிடத்தில் அறிய..! ஏபிபியின் தலைப்பு செய்திகள்..!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
- கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு
- தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
- விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
- சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
- தலித் மக்களுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி நடக்கிறதே அங்கெல்லாம் சிவப்பு கொடி உயர வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி விழுப்புரத்தில் பேசியுள்ளார்.
- தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
- சாராய வியாபாரிகள் கைது எல்லாம் ஒரு மாதம் மட்டுமே பிறகு இந்த சீனே இருக்காது - பிரேமலதா விஜயகாந்த்
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அனைத்து சத்துணவு மற்றும் குழந்தைகள் மையங்களிலும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
- ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
- காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளிடையே தான் அதிகம் விவாகரத்து நிகழ்வதாக உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
- மத்திய அமைச்சர் எல்.முருகன் கேன்ஸ் திரைப்பட விழாவில், பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார்.
- கர்நாடக மாநில முதலமைச்சர் யார் என்பது இன்று உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஷ்வரா கூறியுள்ளார்.
- சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்காக இந்தியாவை விமர்சித்த மத சுதந்திரம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையை இந்திய அரசாங்கம் நிராகரித்தது.
- நான்கு நாட்கள் கடந்தும் நீடிக்கும் சஸ்பென்ஸ் - கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியேற்பு விழா திடீர் ஒத்திவைப்பு
- திருப்பதியில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவைக்கு இன்று முதல் முன்பதிவு
உலகம்:
- ஜி-7 உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஜோ பைடன் சந்தித்து பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
- ஆப்பிரிக்கா கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு
- பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு, மாணவி ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன.
- பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- சென்னை பிளே ஆஃப் போட்டி: ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அணி நிர்வாகம் அறிவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion