மேலும் அறிய

Karnataka: அண்ணன் - தங்கை முறை.. அறியாமல் வந்த காதல்.. எதிர்ப்பால் எடுத்த விபரீத முடிவு.. கர்நாடகாவில் சோகம்..

முறைதவறிய உறவு என்பதால் காதலை கைவிடும்படி உறவினர்கள் வற்புறுத்தியதையடுத்து காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டம் யாத்ரமி தாலுகா மாகனகெரே கிராமத்தை சேர்ந்தவர் கொல்லப்பா (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொல்லப்பா  தனது உறவினரான சசிகலாவை (வயது 20) விரும்பியுள்ளார். இருவரும் காதல் வசப்பட்ட நிலையில், இவர்கள் உறவு முறையில், அண்ணன் தங்கை என கூறி உறவினர்கள் காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை.

இதற்கிடையே சசிகலாவின் மனதை மாற்றிய பெற்றோர், அவருக்கும் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கிராமத்தை சேர்ந்த வேறு நபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். பின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளும் செய்தனர். இந்த விஷயம் கொல்லப்பாவிற்கு தெரிய வந்தது. இதனால் கொல்லப்பா சசிகலாவை சந்திக்க முடிவு செய்தார். அதனை தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு ஓடினர்.

பின் அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வீட்டை விட்டு இருவரும் வெளியேறியதை அறிந்த உறவினர்கள் அவர்களை தேடி வந்தனர். இதனால் கொல்லப்பா மற்றும் சசிகலா இருவரும் கிராமத்தில் இருக்கும் புறநகர் பகுதிக்கு சென்று மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

முன்னதாக அவர்கள் தற்கொலை செய்வது மற்றும் அதற்கான காரணத்தை வீடியோவாக எடுத்து தங்கள் வாட்ஸ்-அப்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பினர். இதுபற்றி அறிந்தவுடன் பதறிப்போன உறவினர்கள் புறநகருக்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது இருவரும் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

யாத்ரமி காவல் நிலைய போலீசார் இது பற்றி தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று இருவரின் உடலையும் கைப்பற்றினர். பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget