Edible Oil: சமையல் எண்ணெய்.. புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு.. என்னென்ன தெரியுமா?
உணவு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உணவு தொடர்பான பொருட்களுக்கு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் தற்போது உணவிற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் தயாரிப்பிற்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உணவு வழங்கல் மற்றும் வாடிக்கையாளர் விவகாரங்கள் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உணவு பயன்பாட்டிற்கு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுடைய எண்ணெய் அளவை வெப்பநிலை இல்லாமல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய உத்தரவை வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது உணவு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பில் எண்ணெய் அளவுடன் சேர்ந்து வெப்ப நிலையை அட்டையில் தெரிவித்து வருகின்றன. அதை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Centre asks edible oil producers to declare net quantity in volume without temperature in addition to declaring the same in weight
— PIB India (@PIB_India) August 25, 2022
Further advises manufacturers, packers & importers to correct labeling within six months from the date of direction
Read: https://t.co/UUHjLAlE9M
எதற்காக இந்த மாற்றம்?
மத்திய அரசு பழைய நடைமுறையை தற்போது மாற்றுவதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது. அதாவது எண்ணெய் நிறுவனங்கள் தங்களுடைய வெப்ப நிலைக்கு ஏற்ப எண்ணெய் அளவை மாற்றி வருவதாக மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது.
21 டிகிரி செல்சியஸ்– 919.1 கிராம்
30 டிகிரி செல்சியஸ் – 912 கிராம்
40 டிகிரி செல்சியஸ் – 906.2 கிராம்
50 டிகிரி செல்சியஸ் – 899.4 கிராம்
60 டிகிரி செல்சியஸ் – 892.6 கிராம்
அதாவது ஒவ்வொரு வெப்ப நிலைக்கு ஏற்ப எண்ணெய் அளவு மாறி வருகிறது. இதன்காரணமாக வாடிக்கையாளர்களுக்கு உரிய அளவு கிடைப்பதில்லை. இதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு இந்தப் புதிய முடிவை அறிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறையின் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் அளவை சரியாக தர வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த மாற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பில் விரைவாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் மூண்டது. இந்த போர் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 2022ல் சூரியகாந்தி எண்ணெய் விலை 29% வரை அதிகரித்தது. பாமாயில் விலை 17 சதவீதம், கடுகு எண்ணெய் 7 சதவீதம், கடலை எண்ணெய் 4 சதவீதம் விலை ஏற்றம் கண்டிருந்தன.
இந்தியா, அதன் பாமாயில் தேவையில் 45% இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை உயர்ததையடுத்து இந்தோனேசியாவும் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால், சமையல் எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது.