மேலும் அறிய

Railways Privatisation : ரயில்வே துறை தனியார்மயமா? - மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம் இதோ..

2023க்குள் 75 பெட்டிகள் தயாரிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.சென்னை ஐ.சி.எஃப்பில் வந்தே பாரத் திட்டத்தின் கீழான ரயில்வே கோச்கள் உருவாக்கும் பணியை பார்வையிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் கூறிய அவர்,”கடைசியாக நாம் 50களில் தான் கோச்களை வடிவமைத்துள்ளோம். புதிய டிசைன்களை உருவாக்குவது தேவையாக இருக்கிறது.” என்றுள்ளார். 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கோச்கள் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியவை. முதல் இரண்டு பெட்டிகள் வருகின்ற ஆகஸ்ட்க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 2023க்குள் 75 பெட்டிகள் தயாரிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்தியாவின் 2022-23ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார், அவற்றில் ரயில்வே துறைக்காகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரயில்வே துறையின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள், “நாடு முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் 2 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு ரயில்வே கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில்நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்த ரயில்கள் கொண்டு வரப்படுகின்றன. சிறந்த ஆற்றல் திறன்கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 பிரதம கதி சக்தி ரயில் முனையங்கள் அமைக்கப்படும். சிறு விவசாயிகள் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரயில்வே புதிய தயாரிப்புகளை உருவாக்கும்.

பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் என்ற திட்டத்தின் மூலம் 2021-22 நிதிநிலை அறிக்கையில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், எஸ்.சி.எஸ்.டி. பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் மூலம் வழிநடத்தப்படுவார்கள் “ என்று அவர் அறிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்பில் குறிப்பிட்டு எந்த ரயில்சேவைகள் பற்றியும் அறிவிப்புகள் இல்லை. புதியதாக அமைய உள்ள 100 ரயில் முனையங்கள், வந்தே பாரத் ரயில்கள் குறித்து ரயில்வே துறை விரிவாக விளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆத்மநிர்பர் பாரதத்தை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார். ரயில்களின் பயணிகள் கட்டணம் குறைப்பு, சலுகை உள்ளிட்டவை குறித்து எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

நாட்டில் ரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் நிதிநிலை அறிக்கையுடன் இணைந்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget