Manmohan Singh: மன்மோகன் சிங் பிரதமரானது எப்படி? சோனியா காந்தியிடம் ராகுல் சொன்னது என்ன ?
Manmohan Singh Became Prime Minister: சோனியா காந்தி பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டது எப்படி? ; என்ன நடந்தது?

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மன்மோகன் சிங், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மன்மோகன் சிங் மறைவிற்கு , காங்கிரஸ் கட்சியினர் உட்பட இதர கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
சோனியா காந்தி பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுதான் நடக்கவில்லை , திடீரென நேரு குடும்பத்தில் இல்லாத மன்மோகன் சிங் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்து பார்ப்போம்.
2004 மக்களவைத் தேர்தல் :
2004 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள், குறிப்பாக பாஜகவினர் சோனியா காந்திக்கு எதிராக குரல் எழுப்ப ஆரம்பித்தனர். இந்திய நாட்டை, வெளிநாட்டைச் சேர்ந்தவர் எப்படி ஆட்சி செய்யலாம் என எதிர்ப்புகளை வைக்க ஆரம்பித்தனர். அதிலும் , குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் தெரிவித்ததாவது , “ சோனியா காந்தி பிரதமரானால் , நான் செருப்பு அணிய மாட்டேன் என்றும் வெள்ளை ஆடைதான் உடுத்துவேன்” என்றும் சபதம் எடுத்தார்.
”அம்மா வேண்டாம் “
அப்போது, ராகுல் காந்தி சோனியா காந்தியிடம் சென்று , “ அம்மா , பாட்டியும் படுகொலை செய்யப்பட்டார், தந்தையும் படுகொலையும் செய்யப்பட்டுவிட்டார்; நீங்களும் பிரதமராக பொறுப்பேற்றால் , இதுபோன்ற நடக்கலாம் என்றும் “ ராகுல் காந்தி தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியினர் எதிர்ப்புகளை செவிசாய்க்காத சோனியா காந்தி, தனது மகன் சொல்வதை கேட்டு மனம் மாறியதாக மூத்த பத்திரிகையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங்:
இதையடுத்து, மூத்த தலைவர்களுடன் கூட்டம் நடத்தினார் சோனியா. அக்கூட்டத்தில் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரும் இருந்தனர். மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்வு செய்வதாக சோனியா அறிவித்தார். ஆனால், முதலில் பிரதமர் பதவியை மன்மோகன் மறுத்ததாகவும், பின்னர் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சோனியா காந்தி , மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் , அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து , பிரதமராக பதவியேற்க உரிமை கோரினர்.
இதையடுத்து, இந்தியாவின் 13வது பிரதமராக 2004 ஆண்டு பொறுப்பேற்ற பிரதமர் மன்மோகன் சிங், 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.
1971 ஆம் ஆண்டு இந்திய அரசின் வர்த்தக துறையின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார். 1972ம் ஆண்டு நிதி துறையின் தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார்.
இதையடுத்து திட்ட குழுவின் அறிக்கையின் துணைத் தலைவர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமர் ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















