பலரின் வாழ்க்கையை மாற்றிய பள்ளி.. இப்போ பரிதாப நிலையில்.. காரே உள்ள போகும் அளவுக்கு ஓட்டை
நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய பள்ளி தற்போது மோசமான நிலையில் உள்ளது. வகுப்பறைகளில் வர்ணம் பூசாத சுவர்கள், ஓட்டையும் உடைசலுமாய் காட்சி அளிக்கிறது. காரே உள்ளே போகும் அளவுக்கு ஓட்டைகள் இருக்கின்றன. கலை அருங்காட்சியகத்தில் இருப்பது போல் தூணே இல்லாமல் ஜன்னல் காற்றில் தொங்குகிறது.

பல மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய கிராமப்புற பள்ளியின் பரிதாப நிலையை கண்டு உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். மணிப்பூரில் கடந்த 1959ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பள்ளி தற்போது சிதிலமடைந்து, ஓட்டையும் உடைசலுமாய் காட்சி அளிக்கிறது.
ஓட்டையும் உடைசலுமாய் காணப்படும் பள்ளி:
மணிப்பூர் உக்ருல் மாவட்டத்தில் தொலைதூரத்தில் அமைந்துள்ள கிராமத்தில் அமைந்துள்ளது பௌச்சம் உயர்நிலைப் பள்ளி. நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய இந்த பள்ளி தற்போது மோசமான நிலையில் உள்ளது. வகுப்பறைகளில் வர்ணம் பூசாத சுவர்கள், ஓட்டையும் உடைசலுமாய் காட்சி அளிக்கிறது. காரே உள்ளே போகும் அளவுக்கு ஓட்டைகள் இருக்கின்றன. கலை அருங்காட்சியகத்தில் இருப்பது போல் தூணே இல்லாமல் ஜன்னல் காற்றில் தொங்குகிறது.
பள்ளியின் புகைப்படங்களை உக்ருல் டைம்ஸ் என்ற உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், நான்கு பெஞ்சுகள் மட்டுமே போடப்பட்டிருக்கின்றன. ஆறு மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் கற்பிப்பது அந்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. கடினமான, உலர்ந்த மண்ணால் ஆன தரை, செங்கல் மற்றும் சிமெண்டால் ஆன சுவர்கள், வர்ணம் பூசப்படாமல் விடப்பட்டுள்ளன.
புகார் கூறும் உள்ளூர்வாசிகள்:
இதுகுறித்து உள்ளூர்வாசி டென்னோசன் ஃபெய்ரி கூறுகையில், "பள்ளியை சீரமைக்குமாறு கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புங்சாம் கிராமத்தைச் சேர்ந்த பல மாணவர்கள், தங்கள் கிராமத்தில் உள்ள ஒரே அரசுப் பள்ளி எந்த நாளிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், மாவட்டத்தின் பிற பள்ளிகளுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது" என்றார்.
70கள் மற்றும் 80களில், பௌச்சம் உயர்நிலைப் பள்ளி, பல புத்திசாலித்தனமான மாணவர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களாக மாறி இருக்கின்றனர் என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இன்று, அந்த பள்ளியில் 47 மாணவர்கள்தான் எஞ்சியுள்ளனர்.
கடைசியாக இந்தப் பள்ளி 2009-10 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு, சில புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு, மார்ச் மாதம் தொடங்கப்பட்ட மத்திய அரசு திட்டமான ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA) இன் கீழ் இந்த பள்ளி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் கட்டிடத்தை சேதப்படுத்தியது. ஆனால், அதன் பிறகு அதிகாரிகள் எந்த பெரிய பழுதுபார்ப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை என உள்ளூர்வாசிகள் புகார் கூறுகின்றனர். பள்ளியை பழுதுபார்த்து பராமரிக்காததற்காக கிராம மக்கள் மாநில அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.






















