நாயின் பிறந்தநாளுக்கு 100 கிலோ கேக்! 4 ஆயிரம் பேருக்கு சாப்பாடு! ஓனரின் ஓஹோ கொண்டாட்டம்!
நாய்களுக்கு மனிதர்களுக்குமான உறவு, பல தருணங்களிலும் பலரால் பலவிதமாக வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தன் செல்லப் பிராணிக்காக ஒருவர் செய்த செயல் நெட்டிசன்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது
கர்நாடகாவைச் சேர்ந்த நபர் தனது செல்ல நாய் மீதான அன்பை வெளிப்படுத்திய விதத்துக்காக நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.
100 கிலோ கேக்
கர்நாடகாவின் பெலகாவியைச் சேர்ந்த ஷிவப்பா எல்லப்பா மரடி சமீபத்தில் தனது நாயின் பிறந்தநாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடியுள்ளார். தனது செல்ல நாயான க்ரிஷ்ஷின் பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்ற விரும்பிய ஷிவப்பா, அதற்காக 100 கிலோ கேக்கை ஆர்டர் செய்து வெட்டியுள்ளார்.
இந்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் தற்போது ஹிட் அடித்துள்ளது.
மிகப் பெரிய கேக் உடன் ஷிவப்பா தனது செல்ல நாய் கிரிஷை பிறந்த நாள் கொண்டாடுபவராக அலங்காரப்படுத்தி, பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாடி இருவரும் கேக் வெட்டும் விதத்தைப் பார்த்து செல்லப் பிராணி வளர்ப்பவர்களும் பூரித்து வருகின்றனர்.
View this post on Instagram
4 ஆயிரம் பேருக்கு உணவு
மேலும், இந்நிகவில் 4 ஆயிரம் நபர்களுக்கு உணவு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக இதேபோன்று, நொய்டாவில் வசிக்கும் ஒருவர் சமீபத்தில் தனது செல்லப் பூனையை புனித கேதார்நாத் கோயிலுக்கு அழைத்துச் சென்ற நிகழ்வு வைரலானது.
விகாஷ் தியாகி எனும் அந்நபர் யாத்திரையின் போது தனது செல்லப் பிராணியை புனித ஸ்தலத்துக்கு அழைத்துச் சென்றதாகக் கூறி அவர் மீது வழக்குப் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்