மேலும் அறிய

Viral video: ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் திகார் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்தார். அந்த இளைஞரை ஓடும் ரயிலில் இருந்து சக பயணியே தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் திகார் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்தார். அந்த இளைஞரை ஓடும் ரயிலில் இருந்து சக பயணியே தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அயோத்தியா-டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் சக பயணியால் கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

அயோத்தியாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிந்த ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சக பயணிகள் இருவர் கடுமையாக தாக்குகின்றனர். பின்னர், அதில் ஒரு பயணி மட்டும் அவரை வாயில் பகுதி அருகே தூக்கி வீசுகிறார். அந்த இளைஞர் செல்போனை திருடியதால் சக பயணிகள் இருவர் ஆத்திரமடைந்து அவரை தாக்கியதாக தெரிகிறது. கோபத்தின் உச்சகட்டத்தில் அந்த இளைஞரை தூக்கி வீசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தண்டவாளத்திற்கு அருகே இருந்த இரும்புக் கம்பத்தில் மோதி அவர் உயிரிழந்திருக்கிறார்.

இதுதொடர்பாக காவல் துறையினர் நரேந்திர குமார் என்பவரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ நெஞ்சை பதபதைக்க வைக்கிறது.

இதனிடையே,

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் 17 வயது சிறுமியை அவரது தந்தையும், மாமாவும் அடித்தே கொலை செய்துள்ளனர். பின்பு ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக அந்த சிறுமியின் உடலை எரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது சிறுமி

மகாராஷ்டிரா ஜல்னா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியில் இருக்கும் அவரது உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்தபோது அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் வேறொரு நபருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

இதனை அறிந்த அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே செல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த வாரம் தனது காதலனுடன் அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியே சென்றார். சில நாட்கள் கழித்து அந்த சிறுமி இருக்கும் இடத்தை அவரது பெற்றோர்கள் கண்டுபிடித்தனர். பின்பு சிறுமியை பார்க்க அந்த இடத்திற்கு அவரது பெற்றோர் சென்றனர். காதலித்த நபருடனே திருமணம் செய்து வைப்பதாக சிறுமியிடம் அவரது தந்தை உறுதியளித்ததை  அடுத்து, சிறுமி மற்றும் அவரது காதலன் வீட்டிற்கு திரும்பினர். அனைவரின் முன்னிலையிலும் சத்தியம் செய்த தந்தை, ஜல்னா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தில் திருமணம் ஏற்பாடு செய்தார். அந்த திருமணத்தில் இருவீட்டாரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

வரதட்சணையால் மோதல்

இதனை தொடர்ந்து, இருவீட்டாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.  வரதட்சணை கொடுப்பது தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடைபெறவிருந்த திருமணம் நின்றுவிட்டது. இதனால் தனது குடும்பத்திற்கு அவமானம் என்று நினைத்து மண்டபத்தில் இருந்து சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.

கொடூர கொலை 

திருமணம் கடைசி நேரத்தில் நின்றதால் தனது குடும்பத்திற்கு அவமானம் என்று நினைத்து அந்த சிறுமியை அவரது தந்தை மற்றும்மாமா கடுமையாக அடித்துள்ளனர். இதனை அடுத்து, கடும் கோபத்தில் இருந்து தந்தை சிறுமியின் கழுத்தை வீட்டின் பக்கத்தில் இருக்கும் மரத்தில் தூக்குப் போட வைத்துள்ளார்.

இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக சிறுமியின் உடலை ஏரித்துள்ளனர். இதற்கிடையே தனது காதலி மாயமானதாக நினைத்து அவரது காதலன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா கைது செய்யப்பட்டனர். 

 

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget