Watch video: ரீல்ஸுக்கு ஆசைப்பட்டு பீச்சில் ரைடு! மணலில் சிக்கிய SUV கார்!
கேரளாவில் உள்ள ஒரு கடற்கரை மணல் வழியாக SUV ஜீப் செல்லும்போது மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் கடற்கரைகளில் கார்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு, கோவாவின் புகழ்பெற்ற மோர்ஜிம் கடற்கரையைச் சுற்றியுள்ள மென்மையான கடற்கரை மணலில் MG ஆஸ்டர் ஒன்று சிக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி வைரலானது.
அந்தவகையில், தற்போது கேரளாவில் உள்ள ஒரு கடற்கரையின் தளர்வான மணல் வழியாக SUV ஜீப் மக்களை கடந்து பயணம் செய்கிறது. ரீல்ஸுக்காக கடற்கரையில் ஓட்டப்பட்ட அந்த கார் சிறிது நேரத்தில் கடல் கரை மணலில் சிக்கிக் கொள்கிறது. ஜீப் காம்பஸின் ஓட்டுநர் வாகனத்தை ரிவர்ஸில் வெளியே எடுக்க கடுமையாக முயற்சிப்பதைக் காணலாம். இருப்பினும், கார் சிக்கித் தவிக்கிறது. ஓட்டுநர் எவ்வளவு முயற்சிகள் செய்தபிறகும், வாகனத்தை பின்புறமாக எடுக்க முடியவில்லை.
இதையடுத்து, எஸ்யூவி ஓட்டிவந்த டிரைவருடன் மற்றவர்கள் சண்டையிட்டு, அருகிலிருந்த கட்டையை கொண்டு தாக்க முயற்சி செய்தனர். இதன் காரணமாக SUV காரின் டயர்கள் கடற்கரையில் உள்ள தளர்வான மணலில் ஆழமாக பதிந்தது. இச்சம்பவம் காண்போரை வெகுவாகக் கவர்ந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஜீப்பை கடற்கரையிலிருந்து வெளியே எடுக்க கிரேன் வரவழைக்கப்பட்டது.
அதன்பிறகு, கார் கடற்கரையில் இருந்து வெளியேறியதா இல்லையா என்பது அந்த வீடியோவில் முழுமையாக தெரியவில்லை. வீடியோவின்கீழ் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில், காரை வெளியே இழுப்பதற்குப் பதிலாக கடலுக்குள் தள்ளியிருக்க வேண்டும் என்றும், இவர்களின் பொறுப்பற்ற செயலுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
காருக்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் காரின் உரிமையாளர் மற்றும் அந்த நேரத்தில் SUV யில் அமர்ந்திருந்த மற்றவர்கள் தண்டிக்கப்படலாம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், இறுதிவரை காரை கிரேன் வெளியே இழுத்ததா என்பது குறித்து தெரியவில்லை.