மேலும் அறிய

லஞ்சம் பெற்றாரா மஹுவா மொய்த்ரா? - திரிணாமுலின் நிலைப்பாட்டை வெளுத்து வாங்கும் பாஜக

தன்னிடம் பணம் பெற்று கொண்டு, மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பகீர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

ஆளும் பாஜகவை நோக்கி கேள்விகளை எழுப்பி, நாடாளுமன்றத்தையே அதிர வைப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா. இவர், தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு இவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

தன்னிடம் பணம் பெற்று கொண்டு, மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆடம்பர பொருள்கள் கேட்டும், விடுமுறை நாள்களில் வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்வதற்காக தன்னிடம் மொய்த்ரா அடிக்கடி உதவி கேட்பார் என்றும் மக்களைவை நெறிமுறைகள் குழுவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

லஞ்சம் பெற்றாரா மஹுவா மொய்த்ரா?

நாடாளுமன்ற உறுப்பினருக்கான மின்னஞ்சல் ஐடியை மொய்த்ரா தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பிரதமர் மோடி, அதானிக்கு எதிரான கேள்விகளை அதன் வழியாக தான் அனுப்பியதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இப்படிப்பட்ட சூழலில், மஹுவா மொய்த்ரா, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துப, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபவிடம் மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் வழங்கியதோடு சிபியிடம் புகார் அளித்துள்ளார்.

தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மொய்த்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை ஊடகங்களில் ஏன் கசிய வைக்க வேண்டும் என்றும் மக்களவையில் இருந்து தன்னை இடைநீக்கம் செய்ய பாஜக இப்படி செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். தர்ஷன் ஹிராநந்தனியை கட்டாயப்படுத்தி புகார் கடிதத்தில் கையெழுத்திட வைத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இந்த சர்ச்சை வெடித்ததில் இருந்தே, திரிணாமுல் காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் அமைதி காத்து வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரும் மேற்குவங்க பொதுச் செயலாளருமான குணால் கோஷி, இதுகுறித்து கருத்து கூற மறுத்துவிட்டார். 

அமைதி காக்கும் திரிணாமுல் காங்கிரஸ்:

”இந்த விவகாரம் குறித்து, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாது. நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. (மொய்த்ரா) இந்த சர்ச்சை பற்றி  விளக்கம் அளிக்கலாம் அல்லது பதிலளிக்கலாம். இது தொடர்பாக, நாங்கள் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். ஆனால், இப்போது கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை" என குணால் கோஷி தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தை முன்வைத்து பாஜக சரமாரி கேள்விகளை எழுப்பி வருகிறது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் மௌனம் காக்கிறது என்றால் ஒன்று மொய்த்ராவுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் அல்லது அவர்கள் எதையோ மறைக்க முயற்சி செய்கிறார்கள் என பாஜக விமர்சித்துள்ளது.

பாஜக செய்தித்தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், "கருத்து தெரிவிக்கமாட்டோம் என்பதே மஹுவா மொய்த்ரா  விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எடுத்த அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. இதில், மொய்த்ரா விளக்கம் அளிப்பார் என கூறியுள்ளது.

அதன் பொருள் என்னவென்றால், 1) கடுமையான விதி மீறல்களில் மொய்த்ரா ஈடுபட்டுள்ளார் என்பதை திரிணாமுல் ஏற்றுக்கொள்கிறதா? 2) அப்படியானால், அவரை பதவி நீக்கம் செய்யாமல் ஏன் இன்னும் தக்க வைத்துக் கொள்கிறது?" என தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
Embed widget