Watch video : அந்தரத்தில் பறந்த பைக்... கூலாக உட்கார்ந்து ஹாய் சொன்ன மேன்... வைரலாகும் வீடியோ!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரு நபர் அந்தரத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து இருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரு நபர் அந்தரத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து இருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
நாக்பூரில் உள்ள சதர் பஜார் பகுதியில் காற்றில் தொங்கி கொண்டிருந்தபடி ஒரு இரு சக்கர வாகனம் ஒன்று இருந்துள்ளது. அதில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த வாகனத்தில் உட்கார்ந்து இருந்து சுற்றி இருந்தவர்களை வேடிக்கை பார்த்துள்ளார். இதை பார்த்ட்து அதிர்ச்சியடைந்த வழிப்போக்கர்கள் தங்கள் செல்போன்களில் அவர் ஒரு இழுவை வண்டியின் வாகன ஓட்டியிடம் பேசியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த நபர், இழுத்துச் செல்லும் வாகனத்தின் டிரைவரிடம் தன்னையும் தனது ஸ்கூட்டரையும் மீண்டும் தரையில் இறக்க சொல்வது போன்றும், அதற்கு அந்த வாகன ஓட்டி மறுப்பும் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் சாலை ஓரத்தில் அந்த நபரின் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததாகவும், இதை கண்டு நோ பார்க்கிங்கில் நிறுத்தபட்டு இருக்கும் வாகனங்களை எடுக்கும் வாகனம் அந்த இரு சக்கர வாகனத்தை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வாகனத்தின் உரிமையாளர் தனது வாகனத்தை விட்டுகொடுக்க முடியாமல் அந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து நூதன போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இதை எதையும் கண்டு கொள்ளாத மீட்டு வாகனத்தில் டிரைவர் இரு சக்கர வாகனத்தோடு அதன் உரிமையாளரை தூக்கியுள்ளார். இதன் காட்சியே இங்கு வைரலாகி வருகிறது. மேலும், அந்த மீட்பு வாகனத்தில் வேறு சிலரது இரு சக்கர வாகனங்களும் இருப்பதை காண முடிக்கிறது.
View this post on Instagram
பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 2.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 83,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. பல பயனர்கள் தனது ஸ்கூட்டரை விட்டு வெளியேறாததற்காக அந்த நபரை கேலி செய்துள்ளனர். மற்றவர்கள் நோ பார்க்கிங் எதற்காக வண்டியை நிறுத்துனீர்கள் என்று கேள்வியும் எழுப்பினர்.
மேலும் ஒரு சிலர் ”அவர் தனது பைக்கை என் பையனை விட அதிகமாக நேசிக்கிறார்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்