Mumbai Rave Party | அட அந்த சோதனையே போலிதாங்க: மும்பை ரேவ் பார்ட்டி பற்றி பேசிய அமைச்சர்..
மும்பை டூ கோவா சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பார்ட்டியும், அதன் நீட்சியாக நடந்த கைது நடவடிக்கைகளும் போலியானவை என மராட்டிய அமைச்சர் தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை டூ கோவா சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பார்ட்டியும், அதன் நீட்சியாக நடந்த கைது நடவடிக்கைகளும் போலியானவை என மராட்டிய அமைச்சர் தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டி. பங்கேற்றவர்கள் எல்லோரும் ஸ்டார் கிட்ஸ். அதில் ஒருவர் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். இதுவரை இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மும்பை சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் சோதனையே போலியானது என ஷாக் கொடுக்கிறார் மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்.
மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக். அடுத்த குறி ஷாருக்கான் தான் என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவி போலீஸார் வெளிப்படையாகவே சொல்லி வந்தனர். அதைத்தான் இப்போது செய்துள்ளனர். அதேபோல் மும்பை சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்சன்டை அழைத்துச் செல்லும் போது பாஜக மாவட்ட நிர்வாகி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன். அந்த நபர் எதற்கு அர்பாஸ் மெர்சன்டை போலீஸைப் போல் அழைத்துவர வேண்டும். எதற்காக தனியார் டிடெக்டிவ் ஏஜன்ட் எல்லாம் ஆர்யன் கானுடன் இருக்க வேண்டும். அந்த நபர் ஆர்யனுடன் செல்ஃபி எடுத்துள்ளார். இவையெல்லாம் பார்க்கும் போது வேண்டுமென்றே திட்டமிட்டு ஷாருக்கானின் மகனை இந்த வழக்கில் சிக்க வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இந்த ஒட்டுமொத்த சோதனையுமே போலியானது எனக் கூறியிருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் ரெய்டு நடந்த அன்றைய தினம் இரவு என்சிபி அலுவலகத்துக்குள் தனியார் டிடக்டிவ் கிரண் பி கோசாவியும் பாஜக பிரமுகர் மனிஷ் பானுசாலி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆகையால், இந்த கைது, விசாரணை அனைத்தின் பின்னணியிலும் பாஜக இருப்பதாக அமைச்சர் நவாப் கான் கூறுகிறார்.
கடந்த ஞாயிறு அன்று பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் – கௌரி தம்பதியின் மகன் ஆர்யன் கான் மும்பையில் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில் பங்கேற்றபோது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்காக சென்றிருந்த நடிகர் ஷாரூக் கான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மும்பை திரும்பி உள்ளார்.
ஆர்யன் கான் கைதை தொடர்ந்து ஷாரூக் கான் மீது பல்வேறு விமர்சனங்களை பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மகன் போதைப் பொருள் வழக்கில் கைதானதுடன் சமூக வலைதளங்களில் எழும் இந்த விமர்சனங்களால் ஷாரூக் கான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மறுபுறம் ஷாரூக் கானுக்கு ஆதரவும் பெருகி வருகிறது. பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் ஷாரூக் கானை மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சல்மான் கானும் ஷாரூக் கான் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியவுடன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதே போல், ஷாரூக் கானின் இந்த கடினமான காலத்தில் அவரது ரசிகர்களும் தொடர்ந்து ஆதரவுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், என்பிசியோ தனது விசாரணையில், போதைப் பொருளுக்காக ஆர்யன் கான் மற்றும் அவருடைய நண்பர்கள் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் வாட்ஸ் அப்பில் உரையாடியிருப்பது தெரியவந்துள்ளது எனக் கூறியுள்ளனர்.
மேலும், அவர்கள் தங்களுக்கு என்ன விதமான போதைப் பொருள் வேண்டும் என்பதைத் தெரிவிக்க கோட் வேர்டு அதாவது ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் எப்படி பணத்தைக் கொடுப்பது என்பது தொடர்பான தகவல்களையும் பரிமாறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.